நெஞ்சு வலியில் துடிக்கும் தனம்.! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய எபிசோட்..

pandiyan-stores
pandiyan-stores

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் எப்படியாவது  தற்பொழுது முல்லை குழந்தை இருவரும் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். இன்றைய எபிசோடில் ஜீவா வெளியில் இருப்பதால் கதிர் வீட்டிற்குள் வருமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்பொழுது இப்பொழுது இருப்பதுதான் நல்லது உனக்கு ஏதாவது நல்லது கெட்டதுனா நான் வருவேன் எனக்கு ஏதாச்சும்னா நீ வருவ இதுவே போதும் என கூறுகிறார்.

ஆனால் கதிர் ஜீவா வீட்டிற்குள் வராத காரணத்தினால் வருத்தமாக பேச இந்த நேரத்தில் மீனா வருகிறார். கிளம்பலாமா என கேட்க மீனாவும் போகலாம் என சொல்ல அதற்கு கதிர் இப்பவே கிளம்புனமா என கேட்க எல்லா வேலையும் அப்படியே விட்டுட்டு வந்துட்டேன் டா என கூறுகிறார். பிறகு மீனா பாத்திரம் அப்படியே கிடப்பதாக கூறிவிட்டு அனைத்தையும் கழுவி வைத்து விட்டு வருவதாக சொல்கிறார்.

இந்த நேரத்தில் மூர்த்தி இப்பெல்லாம் மீனா அங்க எங்க ஓடி வேலை செஞ்சுகிட்டு இருக்கு என சொல்ல அதுக்கு தனம் ஆமா எனக் கூறுகிறார். பிறகு மீனா அப்பனா நான் வீட்டிற்கு கிளம்புவதாக கூற அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இப்படி சொன்னால் எப்படி என கேட்க ஒரு மாசமா உங்க கூட தானே இருந்தேன் கயல் என்ன மறந்திடுவானு அப்பப்ப போய் மூஞ்ச மட்டும் காமிச்சிட்டு வரேன் தோணுச்சுன்னா காலையிலேயே வந்து உங்க கூட இருக்க போறேன் என் சொல்ல அதற்கு முல்லை அக்கா எப்பொழுதும் என்னை பார்த்துப்பாங்கன்னு எனக்கு தெரியும் ஆனா நீங்க இந்த அளவுக்கு என்ன பாத்துப்பீங்கன்னு நினைக்கவே இல்லை என் மேல் இந்த அளவுக்கு அக்கறையா இருந்ததற்கு நன்றி என சொல்ல அதற்கு மீனா என்னை வழி அனுப்பி வைக்கிறீர்களா என கேட்கிறார்.

பிறகு ஜீவா உள்ள வராத காரணத்தினால் தனம் சென்று ஒரு மாசமா எங்க கூட இருந்தீங்க எனவே எப்பொழுதும் எங்கள் கூடவே இருந்து விடுவீங்க என நினைத்தேன் ஆனா திடீர்னு போடுறேன்னு சொன்னதும் கஷ்டமா இருப்பதாக சொல்கிறார். பிறகு இன்னும் அண்ணன் மேல இருக்கிற கோபம் போகவில்லையா என கேட்க அப்படியெல்லாம் இல்லை அண்ணி நான் கிளம்புறேன் அண்ணன் கிட்ட சொல்லிடுங்க என கூறிவிட்டு  ஜீவா மீனா இருவரும் வீட்டிற்கு கிளம்பி விட கதிரும் இதனை நினைத்து கவலை பட தனம் ஆறுதல் சொல்கிறார்.

இரவில் குழந்தை தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது கத்தியவுடன் பார்வதி, முல்லை, தனம் ஆகியோர்கள் எழுந்திருத்து  பார்த்துக் கொள்கிறார்கள். இந்த நேரத்தில் தனத்திற்கு நெஞ்சு வலி ஏற்படுகிறது. பிறகு பார்வதி ஒன்றரை வயசு வரையும் குழந்தையை நல்லா பாத்துக்கணும் தூக்கத்தை பற்றி யோசிக்கவே கூடாது என சொல்ல அதற்கு முல்லை அவர்களெல்லாம் அப்படி கிடையாது நல்லா பார்த்து பாரு என கூறுகிறார்.

இந்நிலையில் நெஞ்சு வலி தாங்க முடியாத காரணத்தினால் தண்ணீர் குடித்துவிட்டு வருவதாக சொல்ல முல்லை தண்ணி தான் இங்கு இருக்கே என கூறுகிறார். பிறகு இல்லை நெஞ்சை அடைகிற மாதிரி இருக்கு வெளியில் கொஞ்சம் நடந்துட்டு வருகிறேன் என சொல்ல அதற்கு முல்லை முன்னாடி சொன்னீர்களே அதுபோலவா என கேட்க இல்லை சாப்பிட்டது ஏதோ ஒத்துக்கவில்லை என தனம மழுப்பி விட்டு செல்ல ஷோபாவில் நெஞ்சை பிடித்துக் கொண்டு உட்காருகிறார்.

இதனைப் பார்த்துவிட்டு மூர்த்தி என்ன ஆச்சு என கேட்க ஜாலியாக பேசிவிட்டு பிறகு நெஞ்சு வலிப்பதாக கூறியவுடன் மூர்த்தி பதட்டமடைகிறார். இப்பொழுது மருத்துவமனைக்கு போகலாம் என சொல்ல அதற்கு தனம் எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. சாப்பிட்டது சரிக்கவில்லை தூங்குங்கள் என கூறிவிட்டு தனமும் தூங்குவதற்கு சென்று விடுகிறார்.

காலையில் எழுந்தவுடன் நெஞ்சு வலி நிக்காத காரணத்தினால் முதலில் மருத்துவமனைக்கு போய் பார்க்க வேண்டும் மாமா கிட்ட சொன்னா பயப்படுவாரு என தனக்குள் பேசிக் கொண்டிருக்க இந்த நேரத்தில் ஐஸ்வர்யா வருகிறார். அப்பொழுது எனக்கு வெளியில் போக வேண்டிய வேலை இருக்கு குழம்பு வச்சுட்டேன் சோறு மட்டும் வடிச்சிக்க என சொல்ல அதற்கு ஐஸ்வர்யாவும் எங்க போறீங்க என கேட்கிறார். இந்த நேரத்தில் பார்வதி வந்து ஐஸ்வர்யாவை முல்லை கூப்பிடுவதாக சொல்லிவிட்டு தனத்தை சுடுதண்ணி வைக்குமாறு கூறுகிறார் இதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய எபிசோட்  நிறைவடைகிறது.