பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 21/06/2023 இன்றைய எபிசோட்

pandiyan-stores-
pandiyan-stores-

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தொடர்ந்து ஏராளமான திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோடில் முல்லை தனது அப்பாவிடம் கதை சொல்லுமாறு கூறுகிறார். அவரும் சொல்லித் தர பிறகு முல்லை தூங்கி விடுகிறார். இவ்வாறு முல்லைக்கு குழந்தை பிறந்து இருக்கும் நிலையில் அனைவரும் கூட்டுக் குடும்பமாக இருந்து எப்படி பார்த்துக் கொள்கிறார்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் எவ்வளவு இதனால் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதனை தெரியப்படுத்துகிறார்கள்.

பிறகு மருத்துவமனையில் இருந்து அனைவரும் வீட்டிற்கு கிளம்புகிறார்கள் குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆன நிலையில் அனைவரும் தற்போது தான் குழந்தையை பார்க்கிறார்கள். அந்த வகையில் தனம் குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியில் வர மூர்த்தி குழந்தையை வாங்கி கொஞ்சுகிறார். இவரைத் தொடர்ந்து மீனா ஜீவா இருவரும் வாங்கிக் கொண்ட இதனை எல்லாம் பார்த்துட்டு பார்வதி நான் என் பேத்தியை பார்க்கிறது இல்லையா என கூறுகிறார்.

பிறகு பார்வதி வாங்கிக் கொண்ட அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள் தான் கண்ணன் சித்தப்பா என்ன சொல்ல ஐஸ்வர்யா நான் சித்தியென கூறுகிறார். இவ்வாறு பேசிக் கொண்டு இருக்க பிறகு வீட்டிற்கு கிளம்புகிறார்கள். கிளம்பியவுடன் தனத்தின் அண்ணி ஆலம் கரைத்து எடுத்துக் கொண்டு வருகிறார் இந்த நேரத்திலும் பேசிக்கொண்டே இருப்பதனால் பார்வதி ரொம்ப வெயில் அடிக்கிறது எனவே குழந்தையை உள்ள அழைச்சுக்கிட்டு போகலாம் என சொல்கிறார்.

தனத்தின் அண்ணியும் ஆரத்தியை சுத்தி விட்டு கதிரிடம் பணம் கேட்கிறார் அப்பொழுது கல்யாணத்துக்கு தான் அப்படி பண்ணுவாங்க இப்ப குழந்தைக்குமா என கேட்க பிறகு முல்லை பணத்தை தருமாறு கூறுகிறார். அவரும் ₹500 பணத்தை கொடுக்க இதனை பார்த்து இவ்வாறு நல்ல விஷயம் சொன்னா பணம் தராங்கள அதேபோல் எல்லாரும் வேலைக்கு போகாமல் இப்படியே செஞ்சுக்கலாம் என மீனா கூற அனைவரும் சிரிக்கின்றனர்.

வீட்டிற்குள் சென்றவுடன் முல்லையின் அப்பா தனது அக்கா போட்டோ முன்பு நின்று இதுதான் உன் பேத்தி நான் தாத்தாவாகுறத நீ பார்க்காமலேயே போயிட்டியே அக்கா என சொல்ல அதற்கு மூர்த்தி அம்மா அன்புடன் நான் எப்பொழுதும் இருக்கிறார் மாமா என சொல்கின்றார். இவ்வாறு இவர்கள் பேசிக் கொண்டிருக்க பாப்பா முதன்முதல்ல வீட்டிற்கு வந்திருக்கு ஏதாச்சும் சாப்பிடனும் என ஐஸ்வர்யா அனைவருக்கும் பாயாசம் எடுத்து வருகிறார்.

அனைவரும் குடித்துவிட்டு நல்லா இருப்பதாக கூறுகிறார்கள். இவ்வாறு அனைவரும் பேசி சந்தோஷமாக இருக்கும் நேரத்தில் ஜீவா வெளியில் நிற்பதை தெரிந்துக் கொண்ட வெளியில் வந்து ஜீவாவை கதிர் வீட்டிற்குள் வருமாறு கூறுகிறார். ஆனால் ஜீவா வேண்டாம் இங்கே இருக்கேன் இங்க தான் நல்லா காத்து வருது என்ன சொல்ல பிறகு அப்பனா வீட்டிற்குள் வரமாட்டியா என கேட்கிறவர்.

அதான் நீ ஜெயிலில் இருக்கும் பொழுது வந்தேனே என சொல்ல அதற்கு என்ன நான் மறுபடியும் ஜெயிலுக்கா போக முடியும் எனக் கூற அப்படி சொல்லாத என ஜீவா வருத்தப்படுகிறார். பிறகு நான் முதலில் அப்பா பிறகு சித்தப்பாவானேன் தற்பொழுது பெரிய பாவம் ஆகிவிட்டேன் எனக்கூறி மகிழ்ச்சி அடைகிறாள். மேலும் கண்ணனுக்கும் குழந்தை பிறந்த விட்டாள் டபுள் சந்தோஷம் என பேசிக்கொண்டு இருக்க இப்படி இருக்கிறது தான் நல்லது நம்ம பிள்ளைகளை நல்லபடியா வளர்க்கணும் என்ன சொல்ல இதோட இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.