விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலையில் தற்பொழுது முல்லை எந்த பிரச்சனையும் இல்லாமல் உயிர் பிழைத்திருக்கிறார் மேலும் கதிர் முல்லைக்கு பெண் குழந்தையும் பிறந்துள்ளது இதன் காரணமாக ஒட்டுமொத்த குடும்பமும் மிகவும் மகிழ்ச்சியிலிருந்து வருகிறார்கள்.
இன்றைய எபிசோடில் மருத்துவர் முல்லைக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆப்ரேஷன் மூலம் குழந்தையையும் எடுத்து விட்டதாகவும் இருவரும் நன்றாக இருப்பதனால் அனைவரும் கவலைப்பட வேண்டாம் என ஆறுதல் கூறுகிறார் எனவே குடும்பத்தில் இருப்பவர்களும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
இதனைக் கேட்டு உடன் மீனா கதிரை கையைப் பிடித்து வாழ்த்துகிறார் பிறகு ஜீவா, மூர்த்தி இருவரும் கதிரை கட்டிப்பிடித்துக் கொள்ள பிறகு மூர்த்தி நம்ம வீட்டுக்கு இரண்டாவது மகாலட்சுமியும் வந்திருக்கு இனிமே சந்தோஷமா இருப்போம் உன்னோட வாழ்க்கையில் இனிமேல் எந்த பிரச்சனையும் வராது நல்லா இருப்பாடா கதிர் என கூறுகிறார்.
மறுபுறம் மருத்துவமனையிலிருந்து எந்த தகவலும் வரவில்லையே என முல்லையின் அம்மா, அப்பா மிகவும் கவலைப்படுகிறார்கள். பிறகு ஐஸ்வர்யா கண்ணனை போன் செய்யுமாறு கூற கண்ணன் போன் செய்ததாகவும் ஆனால் யாரும் எடுக்கவில்லை என சொல்கிறார். உடனே பார்வதி இங்கே எதற்கு இருக்கீங்க மருத்துவமனையில் இருக்க வேண்டியதுதானே என கேட்க உங்கள பாத்துக்கலாம்னு தான் நாங்க வந்தோம் என ஐஸ்வர்யா சொல்கிறார்.
பிறகு கண்ணன் தான் ஹாஸ்பிடலில் சென்று பார்த்து வருவதாக கிளம்ப மீனா ஆட்டோவில் வருகிறார் வந்தவுடன் பார்வதியை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுக அனைவரும் என்ன ஆனது என கேட்கிறார்கள் அதற்கு மீனா எல்லாம் நல்ல விஷயம் தான் ஆப்ரேஷன் நல்லபடியா முடிஞ்சிடுச்சு பெண் குழந்தை பிறந்திருக்கு முல்லையும் நல்லா இருப்பதாக சொல்ல அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
மீனா தான் வாங்கி வந்த ஸ்வீட்டை அனைவருக்கும் தருகிறார் பிறகு யாரும் சாப்பிடவில்லை என்பதால் கண்ணனை கடையில் சாப்பாடு வாங்கி வருமாறு சொல்ல கண்ணன் பணம் இல்லாமல் முழிக்கிறார் உடனே மீனா கண்ணனிடம் பணம் தந்து அனுப்புகிறார். மறுபுறம் ஜீவா தனத்திற்கும் கதிருக்கும் சாப்பாடு கூட அதற்கு தனம் தனக்கு வேண்டாம் என சொல்கிறார் எனவே ஜீவா நீங்க மூணு மாத்திரை போட வேண்டும் என மீனா சொன்னா எனவே சாப்பிட வைக்க வேண்டும் என மிரட்டுவதாக கூறுகிறார்.
கதிரும் சாப்பாடு வேண்டாம் என சொல்ல இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் மூர்த்தி அனைவருக்கும் சாப்பாடு வாங்கிக் கொண்டு வருகிறார். இவ்வாறு சாப்பிட்டுவிட்டு பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் கதிர் தனியாக நின்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது முல்லைக்கு இப்படி நடந்ததற்கு காரணமானவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக செல்ல இதனை ஜீவா பார்த்துவிட்டு எங்கு போறா என கேட்கிறார்.
இவ்வளவுக்கு நம்ம கஷ்டப்பட்டதுக்கு முல்லை உயிர் போகும் நிலைமைக்கு சென்றது இதற்கெல்லாம் காரணமான பழிவாங்க வேண்டும் இங்கு நம் அழுதுகிட்டு இருக்கோம் அங்க அவன் சந்தோஷமா இருக்கா என சொல்ல யார் அவன் என ஜீவா கேட்கிறார். அப்பொழுதுதான் அந்த ரத்தினம் என சொல்கிறார் பிறகு ரத்தினம் தொடர்ந்து கடையில் பிரச்சினை செய்ததைப் பற்றி அனைத்தையும் ஜீவாவிடம் கதிர் கூற இதை ஏன் என்கிட்ட சொல்லல என கேட்கிறார்.
முல்லைக்கு இப்படி ஆனதுல என்னால எதுவும் யோசிக்க முடியல ஆனா இப்பொழுதுதான் நன்றாக இருக்கிறாள் அவனை போய் ஒரு வழி பண்ணிட்டு வரேன்னு என சொல்ல ஜீவா நானும் வருவதாக சொல்கிறார். ஆனால் இது எனக்கும் அவனுக்கும் இருக்கிற பிரச்சனை நீ வரக்கூடாது என கூறிவிட்டு கதிர் சென்று விடுகிறார். ரத்தினத்தை பார்த்து பயங்கரமாக அடித்து விட பக்கத்தில் இருக்கும் ரவுடிகளும் கதிரிடம் சண்டை வருகிறார்கள் ஆனால் அனைவரையும் கதிர் அடித்து விடுகிறார் கடைசியாக கதிர் பக்கத்தில் இருந்த கல்லை தூக்கி ரத்தினத்தின் மேல் போடுவதற்காக நிற்கிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.