உயிரை விடும் அளவிற்கு துணிந்த கதிர்.. உங்க குடும்பத்து சனியன் என் மகளுக்கு புடிச்சிகிச்சி என குத்தி காட்டும் பார்வதி.! பாண்டியன் ஸ்டோர் சீரியல் இன்றைய எபிசோட்

pandiyan stores
pandiyan stores

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது முல்லைக்கு அடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அனைத்து குடும்பமும் முல்லைக்கும் குழந்தைக்கும் எந்த பிரச்சினையும் இருக்க கூடாது என கடவுளிடம் வேண்டி வருகிறார்கள்.

அப்படி இன்றைய எபிசோடில் தனம், முல்லையின் அம்மா பார்வதி இருவரும் கோவிலுக்கு சென்றிருக்கும் நிலையில் அங்கு எல்லாத்துக்கும் தான் கல்யாணம் நடக்குது குழந்தை பெத்துக்கறாங்க ஆனா என் மகளுக்கு மட்டும் எல்லா விஷயமும் முட்டி மோதி தான் கிடைக்கிறது என புலம்புகிறார். மறுபுறம் மருத்துவமனையில் கதிர் தொடர்ந்து அழுகையை நிப்பாட்டாமல் இருக்க ஜீவா அழாத கதிர் என ஆறுதல் கொடுக்கிறார்.

என்னால முடியல உனக்கே தெரியும் முல்லையை கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி என்ன ஒரு பொண்ணு கூட பார்த்தது இல்லை எல்லாரும் என்னை கோபக்காரன் காட்டான் என தான் சொல்வார்கள் ஆனால் இதை எல்லாம் மாற்றியது முல்லை தான் அவ இல்லைன்னா என்னால இருக்கவே முடியாது. எனக்கு எல்லாமே முல்லை தான் அவ இல்லை நான் இல்லை எல்லாமே எனக்கு அவதான் ஏன் எல்லார்கிட்டயும் எப்படி பேசணும், நான் இப்படி பேண்ட் சட்டை போடுவதற்கு கூட அவதான் காரணம் அனைத்தையும் சொல்லிக் கொடுத்தா.

ஆனால் அவளுக்கு இப்படி ஆயிடுச்சு அவ இல்லைன்னா நான் இல்லை என கூறி புலம்ப ஜீவா அப்படியெல்லாம் யோசிக்காத முல்லைக்கு எதுவும் ஆகாது என ஆறுதல் கூறுகிறார்கள். மறுபுறம் மூர்த்தி தனது அம்மா அப்பா போட்டோ முன்பு நின்று கொண்டு ஏன் எங்களுக்கு இவ்வளவு கஷ்டத்தை கொடுக்குறீங்க எல்லா கஷ்டத்தையும் எங்களிடம் விட்டுட்டு போயிட்டீங்க உங்கள தான் நாங்க சாமியா கும்பிடுகிறோம் முல்லை நினைச்சு கதிர் அழுதுகிட்டு இருக்கான்.

நம்ம குடும்பமே கஷ்டப்படுது உங்களுக்கு தெரியுதா இல்லையா எப்படியாவது இந்த பிரச்சனையில் இருந்து எங்களை காப்பாத்துங்க என்ன வேண்டுகிறார். பிறகு தனம் ஐஸ்வர்யா இருவரும் கோவில் இருக்கு சென்றிருக்கும் நிலையில் முல்லை குழந்தை இருவரும் எந்த பிரச்சனையும் இல்லாமல் பொழச்சிக்கணும் குழந்தையும் நல்லபடியாக இருக்கணும் என வேண்டுகிறார்.

நேரம் ஆனதால் நடையை சாத்த வேண்டும் என பூசாரிகள் சொல்ல ஐஸ்வர்யா வாங்க அக்கா வீட்டுக்கு போகலாம் நீங்கதான் எல்லாத்துக்கும் தைரியம் சொல்ல வேண்டும் ஆனால் நீங்களே இப்படி அழுதுகிட்டு இருந்தா என்ன பண்றது எனக் கூற அதற்கு தனம் முல்லைக்கு குணமாகற வரையும் நான் இங்கிருந்து வரமாட்டேன் என சொல்லுகிறார். ஐஸ்வர்யா பாண்டியன் அங்கு அழுதுகிட்டு இருப்பான் என சொல்லி சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து செல்கிறார்.

இவர்களுக்கு முன்பே முல்லையின் அம்மா அப்பா வந்துவிட இவர்கள் காலையில் இருந்து சாப்பிடவில்லை என்பதால் மூர்த்தி சாப்பாடு வாங்கி செல்கிறார். அதற்கு பார்வதி வேண்டாம் எனக் கூற ஏற்கனவே உங்களுக்கு உடம்பு சரியில்லை என மூர்த்தி சொல்ல அதற்க்கு நான் செத்து விட்டு போறேன் என்னோட பொண்ணு இவ்வளவு கஷ்டப்படுறாளே உங்க குடும்பத்திற்கு இருக்கும் சனியன் அவளையும் பிடிச்சுகிச்சு என கூறி மூர்த்தியை கஷ்டப்படுத்துகிறார் இதோடு இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.