விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்பொழுது முல்லைக்கு அடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இன்றைய எபிசோடில் கதிர் முல்லையை மருத்துவமனையில் அட்மிட் செய்திருக்கும் நிலையில் இது தெரிந்த குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு வருகின்றனர்.
முல்லைக்கு என்ன ஆனது என கேட்க கதிரால் சொல்ல முடியாமல் அழுகிறார். பிறகு அனைவரும் கதிரை சமாதானப்படுத்த மூர்த்தி நம்மளுடைய குடும்பத்திற்கு மட்டும் ஏன் இவ்வளவு பிரச்சனை வருகிறது என தெரியவில்லை என கூறிய அழுகிறார் அதற்கு மீனா நீங்களே இப்படி அழுதா எப்படி மாமா ஏற்கனவே உங்களுக்கு உடல்நிலை சரியில்லை நீங்கதான் ஆறுதல் கூற வேண்டும் என சொல்கிறார்.
இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் முல்லையின் அம்மா, அப்பா வந்துவிட பார்வதி கதிரிடம் என்னுடைய மகளை பார்க்க வேண்டும் என கேட்டு சொல்கிறார். அதற்கு மீனா கொஞ்சம் சும்மா இருங்க சித்தி இப்பதான் டாக்டர் போயிருக்காங்க எனக் கூறுகிறார் பிறகு கதிரிடம் மாசமா இருக்கிற நேரத்துல இப்படிதான் வண்டியில அவளை அழைத்துக்கொண்டு போவீங்களா என கேட்க அதற்கு தனம் கதிர் சரியா தான் போயிருக்கான் எதிரில் வந்தவங்க தான் வேண்டும் என்று இப்படி செய்திருக்காங்க என சொல்கிறார்.
முல்லையின் அப்பா முல்லைக்கு அதிகமா ரத்தம் பொயிடுச்சா என கதிரிடம் கேட்க கதிர் முல்லை அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு அழுகிறார் எனவே அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். பிறகு டாக்டர் வெளியில் வர முல்லைக்கு எப்படி இருக்கிறது என கேட்க கிரிட்டிக்கலான சூழ்நிலையில் தான் இருக்கிறார் முதலில் குழந்தையை ஆப்ரேஷன் செய்து எடுக்க வேண்டும் ஆனால் குழந்தைக்கு எந்த பிரச்சினையும் கிடையாது எனக் கூற அதற்கு தனம் ஏழு மாதம் தானே ஆகுது எந்த பிரச்சனையும் இருக்காதுல்ல எனக் கேட்க எல்லாம் பாத்துக்கலாம் அனைவரும் தைரியமாக இருங்க என சொல்கிறார்.
உடனே கதிர் முல்லைக்கு நினைவு வந்துடுச்சா எனக் கேட்க இல்லை அவர் இன்னும் அப்படியே தான் இருக்கிறார் இன்னும் உறுதியாக சொல்ல முடியாது எனக் கூறிவிட்டு செல்ல அனைவரும் அழுகின்றனர். பிறகு முல்லைக்கு அதிகமாக ரத்தம் போயிருப்பதால் நிறைய ரத்தம் தேவைப்படுவதாக சொல்கிறார் உடனே கதிர் பிளட் டோனட் செய்யும் இடத்திற்கு சென்று தனது ரத்தத்தை எடுத்துக் கொள்ளுமாறு சொல்ல உடனே ஜீவா நானும் ரத்தம் தெரியும் என சொல்கிறார்.
இவரை தொடர்பு கண்ணனும் வர ஏண்டா எனக் கதிர் கேட்கிறார் முல்லை அண்ணிக்கு ஒன்னுனா நான் கொடுக்காமல் எப்படி என கூறிவிட்டு மூன்று பேரும் ரத்தம் கொடுக்கின்றனர். இதனை அடுத்து தனம், பார்வதி இருவரும் கோவிலுக்கு சென்றிருக்கும் நிலையில் அங்கு சாமி கும்பிட்டு விட்டு பார்வதி அழுகிறார்.
தனம் அழுகாதீங்க சித்தி ஏற்கனவே உங்களுக்கு உடம்பு சரியில்ல ஏதாச்சும் ஆயிடப்போகுது என சொல்ல அதற்கு பார்வதி ஏதாச்சும் ஆகட்டும் என் பொண்ணு எப்படி கஷ்டப்படுறத பார்க்க என்னால முடியல எல்லாத்துக்கும் ஈசியா கிடைக்கிற ஒன்னு இவளுக்கு மட்டும் முட்டி மோதிதான் கிடைக்கிறது எனக்கூறி கதறுகிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.