5 லட்சம் கடன் வாங்க வக்கு இல்லாத மூர்த்தி.! ஒரு வழியாக வீட்டிற்கு வந்த கதிர்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோட்

pandiyan-stores-345
pandiyan-stores-345

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் ஆஃபீஸர்களை அடித்ததால் கதிர் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வரும் நிலையில் எப்படியாவது இவரை மீட்டெடுக்க வேண்டும் என மூர்த்தி, ஜீவா போராடி வருகிறார்கள்.

எனவே கேச வாபஸ் வாங்க வேண்டும் என்றால் ஆபீஸ் அவர்கள் 5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என கூறியதனால் இந்த பணத்தை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் ஜகார்த்தனன் 5 லட்ச ரூபாய் பணத்தை ஜீவாவிடம் கொடுத்து கதிரை வீட்டிற்கு அழைத்து வருமாறு சொல்கிறார்.

மறுபுறம் மூர்த்தி இது தெரியாமல் பணத்திற்காக அலைந்து வரும் நிலையில் 5 லட்ச ரூபாயை புரட்ட முடியவில்லை எனவே தனம் தன்னிடம் இருந்து அனைத்து நகைகளையும் கொடுக்கிறார். முல்லை எப்படியாவது சீக்கிரம் அவரை வீட்டிற்கு அழைத்து வாருங்கள் என கூறி அழுது கொண்டிருக்க மூர்த்தி கண்டிப்பாக கதிரை அழைத்து வந்து விடுவதாக வாக்கு கொடுக்கிறார்.

இவ்வாறு நகைகளை விற்று மூர்த்தி பணத்தை எடுத்துக்கொண்டு ஆபீஸர்களை பார்ப்பதற்காக செல்கிறார் சொன்னது போலவே 5 லட்சம் ரூபாய் பணத்தை தந்து விடுகிறோம் கேசை வாபஸ் வாங்குங்கள் எனக் கூற அவர்கள் எங்களுக்கு வேலை இருக்கு அதனால் நாளைக்கு காலையில் கேசை வாபஸ் வாங்கி விடுவதாக சொல்கிறார்.

ஆனால் மூர்த்தி எங்களுடைய நிலைமையை புரிந்துகொள்ளுங்கள் நிறமாச கர்ப்பிணியா இருக்கா எனவே நான் கதிரை அழைத்து செல்ல வேண்டும் என கூற பிறகு ஆபிஸர்களும் கேசை வாபஸ் வாங்க போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்கிறார்கள். அங்கு கதிரை கையெழுத்தை போட சொல்லும் நிலையில் தம்பிக்கு ஒன்னுனா அடிக்க கூடாது இவங்களுக்கு சொல்லித் தாங்க என மூர்த்தியிடம் கூறுகிறார்.

மறுபுறம் முல்லையின் அம்மா இன்னைக்குள்ள அழைச்சிட்டு வந்துடுவாங்கல என தனத்திடம் கேள்வி கேட்டு தொந்தரவு செய்கிறார். கதிர் வெளியில் வந்தவுடன் தனது அண்ணன்களை கட்டிப்பிடித்து பாசத்தை பகிர இந்த நேரத்தில் கண்ணன் ஓரமாக நிற்கிறார். அவரை ஜீவா அழைக்க பிறகு கதிரிடம் கண்ணன் மன்னிப்பு கேட்க இவனால் தான் எல்லா பிரச்சனையும் என மூர்த்தி சண்டை போடுகிறார் பிறகு அனைவரும் வீட்டிற்கு செல்ல வண்டி சத்தம் கேட்டவுடன் முல்லை அவங்க வந்துட்டாங்க என கூறி உடியாறுகிறார் அதற்கு பொறுமையாக போங்க என மீனா கூறுகிறார்

கதிரை பார்த்த உடன் அழுது கொண்டே முல்லை கட்டிப்பிடித்துக் கொள்கிறார் கதிர் சமாதானப்படுத்த பிறகு வீட்டிற்குள் அழைக்கிறார்கள். முல்லையின் அம்மா மாப்பிள்ளை போலீஸ் ஸ்டேஷன் வரையும் போய்ட்டு வந்திருக்காங்க எனவே திருஷ்டி சுத்தி போட வேண்டும் என சொல்ல மீனா திருஷ்டி சுற்றுகிறார். அப்பொழுது முல்லையின் அம்மா ஊரு கண்ணு, உங்க அப்பா கண்ணு, தனத்தின் அம்மா கண்ணு என எல்லா கண்ணும் போக வேண்டும் என சொல்ல அதற்கு உங்க கண்ண தவிர மீதி எல்லா கண்ணும் போகணும் அப்படித்தானே சொல்கிறார் மீனா. இவ்வாறு கதிரை வீட்டிற்குள் அழைத்து செல்ல இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.