தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்வதற்காக மருத்துவரை சந்தித்த முல்லை.! மருத்துவர் கொடுத்த அதிர்ச்சி..

pandiyan-stores
pandiyan-stores

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீடர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் நான்கு அண்ணன் தம்பிகளின் பாசம் உறவினை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் மீனாவின் அப்பா ஜகார்த்தனன் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்களின் கடையை மூட வைத்தாலும் கூட அவர்களின் பழைய கடையை திறந்து அதிக லாபத்தை பார்த்து வருகிறார்கள். மேலும் சமீப காலங்களாக முல்லை கர்ப்பமாக இருக்கிறாரா இல்லையா என்பதை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் முல்லை தன்னுடைய குடும்பத்தினருக்கு தெரியாமல் பிரக்னன்ட் கிட் வாங்கி வந்து டெஸ்ட் செய்கிறார் அதில் கர்ப்பமாக இருப்பது தெரிய வருகிறது. மேலும் அதனை நம்ப முடியாமல் இரண்டாவது நாளும் பிரக்னன்ட் கிட்டில் டெஸ்ட் செய்ய அதிலும் கர்ப்பமாக இருப்பது தெரிய வருகிறது  உடனே இதனை தனத்திடம் சொன்னால் என்ன நடக்கும் என்பதை யோசித்துப் பார்க்கிறார்.

இந்த நேரத்தில் முதலில் மருத்துவரை சந்தித்து உண்மையை தெரிந்து கொண்டு அதன் பிறகு வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லலாம் என மருத்துவமனைக்கு செல்கிறார். அங்கு மருத்துவரிடம் எனக்கு இரண்டு மாத காலங்களாக பீரியட் வரவில்லை இதனை நான் கண்டுக்காமல் விட்டு விட்டேன் எனக் கூற மருத்துவர் உன்னுடைய வயிற்றில் இரண்டு மாத குழந்தை இருக்கிறது எனக் கூற முல்லை மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்.

மேலும் இதனை குடும்பத்தினர்களிடம் சொல்வதற்காக ஆர்வமுடன் இருந்து வருகிறார். இவ்வாறு இனி வரும் எபிசோடுகளில் முல்லை தான் கர்ப்பமாக இருப்பதை வீட்டில் இருப்பவர்களிடம் கூற அனைவரும் மகிழ்ச்சி அடைய போகிறார்கள். ஏனென்றால் குழந்தை பாக்கியம் இல்லை என பல அவமானங்களை சந்தித்த நிலையில் இதற்கு மேல் அவர் எந்த அவமானத்தையும் சந்திக்க வேண்டியதில்லை.