விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்பொழுது அண்ணன் தம்பிகள் நான்கு பேரும் அனைத்து பிரச்சினைகளையும் சமாளித்து அனைவரும் ஒன்றாக மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் மீனாவின் அப்பா ஜெகார்த்தனனின் சூழ்ச்சியினால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் கடைகள் மூடப்படுகிறது.
எனவே தற்பொழுது இவர்கள் புதிய கடை ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள் மேலும் அந்த கடைக்கு எடுத்தவுடன் பல திருமணங்களுக்கு தேவையான பொருட்கள் ஆர்டர் வருகிறது எனவே அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள் இதனை அடுத்து இந்த சீரியல் முக்கியமான ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கும் முல்லை, கதிர் இருவரும் அப்பா, அம்மா ஆகப் போகிறார்கள்.
அதாவது முல்லைக்கு குழந்தை பாக்கியம் இல்லை என மருத்துவர் கூறிய நிலையில் அதற்காக 5 லட்சம் ரூபாய் செலவு செய்தார்கள் ஆனால் அப்பொழுதும் முல்லைக்கு தாயாகும் பாக்கியம் கிடைக்கவில்லை இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது முல்லைக்கு கொஞ்ச நாளாக கொமட்டல், மயக்கம், படபடப்பு போன்றவை இருந்து வருவதால் தனம் முல்லை கர்ப்பமாக இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்.
பிறகு மருத்துவமனைக்கு போய் வரலாம் என தனம் கூற அதற்கு முல்லை இரண்டு நாட்கள் கழித்து செல்லலாம் என கூறுகிறார் எனவே கண்டிப்பாக முல்லை கர்ப்பமாக இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது எனவே இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். இதனை அடுத்து மறுபுறம் மீனா எப்படியாவது தன்னுடைய மகளை ஸ்கூலில் சேர்க்க வேண்டும் என முயற்சி செய்கிறார்.
ஆனால் குடும்பத்தில் இருப்பவர்கள் இப்பொழுது வேண்டாம் எனக் கூறிய நிலையில் யாருக்கும் தெரியாமல் ஐஸ்வர்யாவை அழைத்துக் கொண்டு ஸ்கூல் பார்ப்பதற்காக செல்கிறார். எனவே முல்லை ஏன் நேற்று நீங்கள் இருவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு வரவில்லை என கேட்க பிறகு அப்பொழுது ஐஸ்வர்யா நடந்த உண்மைகளை கூறுகிறவர் எனவே தனம் இப்பொழுது ஸ்கூலில் சேர்க்க வேண்டாம் என அதான முடிவெடுத்து இருந்தோம் ஏன் இப்படி என கேட்க மீனா கீழே குனிந்து கொள்கிறார்.