விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியலில் தொடர்ந்து பல திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் முல்லை, ஐஸ்வர்யா இருவரும் கர்ப்பமாக இருந்து வருகின்றனர் இப்படிப்பட்ட நிலையில் திடீரென தனமும் இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பது பெரிதும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.
தன்னுடைய அம்மாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு செல்ல அங்கு மருத்துவர்கள் தனம் கர்ப்பமாக இருப்பதை கூறுகிறார் பிறகு வீட்டில் இருப்பவர்கள் யாரிடமும் கூறாமல் முதலில் மூர்த்தி இடம் தான் கர்ப்பமாக இருப்பதை சொல்ல மூர்த்தி சந்தோஷப்படுகிறார் ஆனால் தான் இதனை எப்படி வீட்டில் சொல்ல முடியும் என கேட்கிறாள்.
பிறகு இந்த விஷயத்தை நீங்கள் தான் வீட்டில் சொல்ல வேண்டும் என மூர்த்தியிடம் கூறுகிறார் பிறகு மருத்துவமனை போயிட்டு வீட்டிற்கு வர மீனா எங்க போனீங்க என கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். எப்பொழுதும் வெளியே போனா என்கிட்ட சொல்லிட்டு தானே இப்ப எங்க போயிட்டு வந்தீங்க என கேட்கிறார் கடைக்கு போயிட்டு வந்ததாக தனம் சொல்லி சமாளித்து விடுகிறார்.
பிறகு வெளியே போயிட்டு அக்காவும், மாமாவும் ரொமான்ஸ் செஞ்சிட்டு வரீங்களோ என ஐஸ்வர்யா, முல்லை இருவரும் கலாய்க்கின்றனர் எனவே இவர்களிடம் இருந்து எப்படி தப்பிக்கிறது என தனம் யோசிக்கிறார். அதன் பிறகு இரவில் அனைவரும் வீட்டிற்கு வந்தவுடன் கர்ப்பமாக இருப்பதை பற்றி கூறுங்கள் என மூர்த்தியிடம் கூறுகிறார்.
பிறகு அனைவரும் வீட்டிற்கு வந்து விட அனைவரையும் மூர்த்தி கூப்பிட்டு வைத்து விட்டு எப்படி சொல்வது என்று தெரியாமல் திணறுகிறார். யாரோ ஒருவர் பெயரை சொல்லி அந்த பெரியப்பாவ தெரியுமா அவருக்கு இப்போ 60 வயசு அவருக்கு இதற்கு அவருடைய பையனுக்கு 18 வயசு ஆனால் தற்பொழுது மீண்டும் அவன் அப்பாவாக போவதாக கூறுகிறார்.
அதற்கு மீனா இவ்வளவு லேட்டா குழந்தை பெத்துக்கிறது எல்லாம் நல்லது இல்லை மாமா குழந்தைக்கு இருபது வயசு ஆகுறதுக்குள்ள அவங்க அம்மா, அப்பா இறந்து விடுவாங்க எனக் கூற மூர்த்தி, தனம் இருவரும் ஷாக்காகின்றனர். ஐஸ்வர்யாவும் இப்பெல்லாம் யாரு மாமா லேட்டா குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள் என்கின்றாள். அதன் பிறகு மூர்த்தியும் சொல்ல வந்ததை விட்டுவிட்டு டைமாச்சு எல்லாரும் போய் தூங்குங்க ஏன்னா சமாளித்து அனுப்புகிறார். பிறகு தனம் உங்களிடம் என்ன சொல்ல சொன்னால் நீங்க ஏதேதோ பேசிக்கிட்டு இருக்கீங்க என சண்டை போட மூர்த்தி இன்னைக்கு வேண்டாம் நாளைக்கு சொல்லிக்கலாம் என கூறி விடுகிறார்.