பாண்டியன் பிறந்தநாளை கொண்டாட தனம் மற்றும் மூர்த்தியை படாத பாடு படுத்தும் தம்பிகள்.! மீனா, முல்லை போட்ட பெரிய பிளான்..

pandiyan-stores
pandiyan-stores

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப கதையினை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் இருந்து வருகிறது.

அதாவது மீனாவின் அப்பா ஜகார்த்தனன் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை வீட்டை விட்டு துரத்திய நிலையில் தற்போது அவர்கள் முல்லை, கதிர் இருக்கும் வாடகை வீட்டில் இருந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மூர்த்தி தனம் கோவிலுக்கு சென்றதும் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் பாண்டியன் பிறந்தநாளை நன்றாக கொண்டாட வேண்டும் என திட்டமிடுகின்றனர்.

சாப்பாட்டிற்கு என்ன செய்வது என கேட்க கதிர் நம்ம ஹோட்டலில் வாங்கிக்கலாம் என சொல்கிறார் ஆனால் அப்படி வாங்கினால் தனத்திற்கு தெரிந்து விடும் என்பதால் வேண்டாம் என ஜீவா சொல்கிறார் பிறகு கதிர் நான் கேக்கு வாங்குகிறேன் என சொல்ல கண்ணன் அப்பொழுது நான் என்ன செய்வது என கேட்கிறார் அப்பொழுது கதிர் வழக்கம் போல நீ அலங்காரம் செய்ய என கூறுகிறார்.

பிறகு இந்த வேலையை முடிக்கும் வரை அண்ணனும் அண்ணியும் வீட்டிற்கு வரக்கூடாது என முடிவு செய்து இருக்கிறார்கள் அப்பொழுது மறுபக்கம் மூர்த்தி ஜீவாவை டெலிவரி கொடுக்க சொல்ல ஆனால் சரவணனை அழைத்து ஜீவா டெலிவரி கொடுக்க சொல்கிறார் பிறகு மூர்த்தி ஏன் அவன் போனால் என்ன எனக் கேட்க எங்களுக்கு முக்கியமான வேலை இருப்பதாக ஜீவா கதிர் சொல்கின்றனர்.

பிறகு பிறந்தநாள் வேலை நிலையாக இருக்கிறது என ஜீவா சொல்ல அண்ணனிடம் சொல்லிவிடுவோமா என பேசிக்கொள்கின்றனர் அவர்கள் பேசியிருப்பதை அண்ணாச்சி கேட்கிறார் அவர் மூர்த்திக்கு தெரியாமல் என்ன செய்யப் போறீங்க என கேட்க இன்னைக்கு பாண்டியனுக்கு பிறந்தநாள் எனவே அண்ணனுக்கு தெரியாமல் கொண்டாட போகிறோம் நீங்கள் சாயங்காலம் வரை வீட்டு பக்கம் வர விடாமல் அண்ணனை பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கூற அண்ணாச்சியும் சரி என சொல்கிறார்.

பிறகு தனத்தையும் வீட்டிற்கு வரவிடாமல் திட்டம் போட பிறகு தனம் பாண்டியன் பிறந்தநாளுக்கு கொண்டாட்டம் தான் இல்லை நான் அவனுடன் இருக்க வேண்டும் என சொல்ல ஆனால் அனைவரும் வேண்டாம் என சொல்கின்றன இப்படிப்பட்ட நிலையில் பிறகு மீனா நாங்க சென்று டிரஸ் வாங்கிட்டு வரோம் நீங்க எல்லோரும் வீட்டிற்கு போங்க என கூறுகிறார்கள் உடனே தனத்திடம் சமாளித்து விட்டு அனைவரும் கிளம்ப தனத்திற்கு சந்தேகம் வருகிறது பிறகு தனம் கஷ்டமரை கவனிக்க அனைவரும் பிறந்தநாள் விழாவை கொண்டாட வேலையை பார்க்கிறார்கள்.