நிச்சயதாரத்திற்க்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்களை வார்த்தையால் குத்தி கிழிக்கும் ஜகார்த்தனன்.! அவமானம் தாங்க முடியாமல் சென்ற மூர்த்தி..

PANDIYAN-STORES
PANDIYAN-STORES

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஏராளமான திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் எப்படியாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை பிரிக்க வேண்டும் என்பதற்காக மீனாவின் அப்பா ஜகார்த்தனன் பல சதி திட்டங்களை செய்து வருகிறார். அந்த வகையில் முதற்கட்டமாக இவர்களுடைய புதிய சூப்பர் மார்க்கெட்டை மூட வைத்த நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள் தங்களுடைய பழைய கடையில் வியாபாரத்தை தொடங்கி உள்ளார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இதனால் மீனா‌, ஜீவா என அனைவரும் ஜகார்த்தனின் மீது கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர். இன்றைய எபிசோடில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்களை அவமானப்படுத்தி உள்ளார் அதாவது தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை அக்கா மல்லிகாவின் மகனுக்கும் மீனாவின் தங்கைக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது.

எனவே எப்படியாவது மீனா, ஜீவாவை இந்த நிகழ்ச்சிக்கு வர வைக்க வேண்டும் என்பதற்காக ஜகார்த்தனன் பல முயற்சிகளை செய்கிறார் பிறகு மீனாவின் தங்கை தன்னுடைய அக்காவை சந்தித்து அழுகிறார் எனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சிக்கு செல்கிறார்கள். அங்கு சென்ற இடத்தில் ஜகார்த்தனன் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்களை தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறார்.

எனவே அனைவரும் கோபமடைந்து அங்கிருந்து கிளம்புகிறார்கள் அதாவது முதலில் மீனா பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்களுக்கு ஜூஸ் கொடுத்து அனுப்புகிறார் எனவே இவர்களும் குடிக்க செல்ல அந்த நேரத்தில் ஜகார்த்தனன் இவர்களுக்கு கொடுக்க வேண்டாம் அங்கு மல்லிகாவின் குடும்பத்தினர்கள் வந்திருக்காங்க அவங்களுக்கு போய் கொடுங்க என கூறுகிறார்.

பிறகு அனைவரும் சாப்பிடுவதற்காக செல்ல இவர்களை ஏன் உட்கார வைத்து சாப்பாடு போடுறீங்க இவங்கள கூப்பிடவே இல்லை எதற்கு இவங்க தேவையில்லாம வராங்க எனக் கூற பிறகு அனைவரும் கோபப்படுகிறார்கள் எனவே அங்கிருந்து கிளம்புகிறார்கள் இவ்வாறு ஜகார்த்தனன் மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்களை அவமானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார்.