விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் நான்கு அண்ணன் தம்பிகளின் பாச உறவினை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் இளவரசிகளின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினை பழிவாங்க வேண்டும் என்பதற்காக மீனாவின் அப்பா ஜகார்த்தனன் பல முயற்சிகளை செய்து வருகிறார் அந்த வகையில் முதல் கட்டமாக கதிரை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்களிடமிருந்து பிரித்த நிலையில் பிறகு தற்பொழுதுதான் அனைவரும் ஒன்றிணைந்துள்ளார்கள் மேலும் இவர்களுடைய பூர்விகா வீட்டை மீனாவின் அப்பாவிடம் விற்றுள்ள நிலையில் இந்த வீட்டியும் விரைவில் காலி செய்ய வேண்டும் என கூறி சண்டை போட்டார்.
எனவே இதன் காரணமாக தற்பொழுது அனைவரும் கதிர் முல்லையில் வீட்டில் தங்கி இருக்கிறார்கள் இவ்வாறு இவர்கள் மகிழ்ச்சியாக இருந்து வரும் நிலையில் ஜகார்த்தனன் இவர்களை எப்படியாவது பிரித்து மூர்த்தியை தனியாக தவிக்க விட வேண்டும் என முயற்சி செய்து வருகிறார் அந்த வகையில் கண்ணன் அவனுடன் வேலை செய்து கொண்டிருந்த அதிகாரி செய்த தவறை கண்டுபிடித்த நிலையில் இதனால் அந்த ஆபீசர் பிரச்சனையில் சிக்கிக்கொண்டார்.
எனவே எப்படியாவது கண்ணனை பழிவாங்க வேண்டும் என ஜகார்த்தனனிடம் கூற பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை பற்றி கூறுகிறார் எனவே அந்த அதிகாரியும் தன்னுடைய அந்தஸ்தால் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை காலி செய்ய வைக்கிறார் இப்படிப்பட்ட நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள் தன்னுடைய கடையை மீண்டும் பழைய கடையில் இருந்து தொடங்குகிறார்கள்.
எனவே அதற்கான வேலைகளும் தொடங்கியுள்ள நிலையில் தனம் விளக்கேற்றி முதல் வியாபாரத்தை தொடங்கியுள்ளார் மேலும் தன்னம்பிக்கையுடன் மீண்டும் கடையை அமைத்துள்ள நிலையில் இவர்களுடைய முயற்சி வெற்றி பெறுமா என்பதை வைத்து இனிவரும் எபிசோடுகள் ஒளிபரப்பாக இருக்கிறது.