வீட்டை விட்டு துரத்திய நிலையில் கடையையும் மூட பிளான் போட்ட ஜகார்த்தனன்.! அதிர்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள்..

pandiyan-stores
pandiyan-stores

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் மீனாவின் அப்பா பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்களுக்கு எதிராக இருந்து வரும் நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை மூடுவதற்கான பிளானை போட்டு வருகிறார்.

அதாவது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவின் அப்பா ஜகார்த்தனன் பேங்க் மேனேஜருடன் இணைத்து எப்படியாவது கண்ணனை பழிவாங்க வேண்டும் என பேசிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது பேங்க் மேனேஜரின் கணவர் அந்த பையனை எதுவும் செய்யவே முடியவில்லை என புலம்புகிறார் உடனே அவனை அடித்தால் அவங்க அண்ணன்கள் எல்லோரும் சண்டைக்கு வருவார்கள் என மீனாவின் அப்பா சொல்கிறார்.

மேலும் ஜகார்தனன் அவர்களை தனித்தனியாக அடிக்க முடியாது ஆனால் நீ நினைத்தால் கடையை மூடலாம் என சொல்கிறார் உடனே அவரும் என்ன செய்ய முடியும் என கேட்காத நான் கடைக்கு பிரச்சனையை உண்டு செய்தால் கண்டிப்பாக எல்லாம் நடக்கும் என்ன சொல்கிறார். இதனைத் தொடர்ந்து மறுபுறம் முல்லை ஹோட்டல் இருக்கு காய்கறி எல்லாம் வெளியே வாங்கி கொள்ளலாம் என பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்பொழுது கதிர் நான் சென்று காய் வாங்கி வருகிறேன் என சொல்ல ஆனால் நீ கடையை மட்டும் பார்த்தால் போதும் என சொல்கிறார். பிறகு மூர்த்தி நீங்க எல்லோரும் இவ்வளவு கஷ்டப்பட்டு ஹோட்டல் வேலையை செய்ய வேண்டாம் என்று சொல்ல தனம் எங்களுக்கு கஷ்டம் எதுவும் இல்லை என கூறுகிறார் ஆனால் மூர்த்தி கடையை கவனித்தால் பிரச்சனை வரும் என சொல்ல கதிர் அதெல்லாம் நாம சமாளித்துக் கொள்ளலாம் என கூறுகிறார்.

பிறகு மூர்த்தி ஏதோ பண்ணுங்க என கூறுகிறார் மறுபக்கம் மூர்த்தி, ஜீவா, கதிர் கடையில் அண்ணாச்சி இடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஒருவர் வந்து கடை யாருடையது என கேட்கிறார் பிறகு மாடிக்கு சென்று பார்க்க மூர்த்தி என்ன ஆச்சு என தெரியாமல் இருக்கிறார்.

அப்பொழுது ஜீவா என்ன பிரச்சனை என கேட்க உடனே அந்த ஆபிசர் இது விவசாய நிலம் இங்கே கமர்சியல் கட்டிடம் கட்டக் கூடாது என சொல்கிறார் உடனே ஜீவா எல்லா அனுமதியும் வாங்கி தான் இவ்வாறு கட்டியதாக சொல்ல பேப்பரை எடுத்துக்காட்டுகிறார் ஆனால் அந்த ஆபிஸர் அதெல்லாம் எனக்கு தெரியாது உடனே கடையை காலி செய்ய என கூறுகிறார்.