பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிலையில் தற்போது மிகவும் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வருகிறது மேலும் குடும்பத்தினர்கள் அனைவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். கண்ணன் பேங்க் மேனேஜர் என்பதால் தான் சம்பாதிக்கும் பணத்தை வைத்துக்கொண்டு தனியாக குடும்பம் நடத்தி திமிரில் இருந்து வருகிறார்.
எனவே தன்னுடைய கணவர் அதிகமாக சம்பாதிக்கிறார் என்ற ஆணவத்தில் ஐஸ்வர்யாவும் திமிராக நடந்து கொள்கிறார். அந்த வகையில் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஈஎம்ஐ-யில் வாங்கி விடுகிறார்கள் அதேபோல் இருக்கிற பணத்தையும் காலி பண்ணுவதற்காக சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று செலவு செய்கின்றனர். இவ்வாறு ஐஸ்வர்யா நிறைய செலவு செய்தாலும் கூட அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாத கண்ணன் அவர் சொல்வதைக் கேட்டு நடந்து கொள்கிறார்.
இவ்வாறு இனி வரும் எபிசோடுகளில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தை மிகவும் வில்லத்தனமாக கொண்டு செல்கின்றனர் தற்போது மக்கள் அனைவரும் ஐஸ்வர்யா கேரக்டரின் மீது கோபத்தில் இருந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் ஐஸ்வர்யாவின் சித்தி கஸ்தூரி பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டிற்கு சென்று அங்கு கண்ணனின் பங்கை கேட்டு வருகிறார்.
பிறகு இதனை ஐஸ்வர்யா கண்ணனிடம் கூற அதற்கு கண்ணன் சண்டை போடுகிறார் இப்படிப்பட்ட நிலையில் கதிர் வந்த இவர்களிடம் பேச மீண்டும் அந்த வீட்டிற்கு வந்து கூட்டு குடும்பமாக வாழ வாய்ப்பு இல்லை என கூறி அனுப்பி வைத்து விடுகின்றனர். இதனை அடுத்து கதிர் கயலை மீனா வீட்டிற்கு கொண்டு வந்து விட வருகிறார் அப்பொழுது மீனாவின் அம்மா கயல் உங்க கூட இருந்துகிட்டாளா என்று கேட்க அதற்கு கதிர் எங்க கூட இருந்தவள் தானே அது எல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை மறந்திடக் கூடாது என்று தான் அடிக்கடி தூக்கிக்கிட்டு போய் பார்க்கிறோம் என்று சொல்கிறார்.
அடுத்ததாக ஜீவாவிடம் கதிர் நீ எப்படி இருக்கிறாய் என்று கேட்க அதற்கு ஜீவாவும் கோபப்படாமல் பொறுமையாக பதில் அளிக்கிறார். இவ்வாறு இதனை பார்த்த மீனா அப்பா கதிரை கஷ்டப்படுத்துவது பேசுகிறார் ஆனால் அதற்கெல்லாம் அசங்காத கதிர் பதிலடி கொடுக்கிறார் உடனே ஜஹார்த்தனன் இந்த குடும்பம் பிரிந்தது பிரிந்ததாக தான் இருக்கும் மறுபடியும் ஒட்ட முடியாது என கூற அதற்கு கதிர் இது இப்படியே நிரந்தரம் கிடையாது மறுபடியும் நாங்கள் ஒன்று சேர்வோம் என சவால் வீட்டுக்கு கிளம்புகிறார்.