விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் தொடர்ந்து பல திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் அனைவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் எப்படியாவது ஜகார்த்தனன்மேலும் இந்த குடும்பத்தை பிரித்து விட வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறார்.
அந்த வகையில் வேண்டும் என்று ஜீவாவிடம் அதை இதையும் சொல்லி மனதை மாற்றி வரும் நிலையில் பிறகு சூப்பர் மார்க்கெட் நல்லா ஓட வேண்டும் எனவே அதற்கு ஒரு ஐடியா தருமாறு கேட்கிறார். மேலும் ஏதாவது அதிரடி ஆஃபர் போடலாமா என கேட்க அதற்கு கதிர் பக்கத்தில் இருக்கும் கடைகள் பாதிக்கப்படும் என சொல்ல பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையும் சேர்த்து தான் கூறுவதாக கூற அதற்கு ஜகார்த்தனன் வில்லத்தனமாக முறைக்கிறார்.
மறுபுறம் கண்ணன் ஐஸ்வர்யா மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வரும் நிலையில் இவர்கள் புதிதாக வீட்டிற்கு தேவையான பொருட்களை அதிக அளவில் வாங்குகின்றனர். இதனை பற்றி மீனா தனத்திடம் கூற தனம், கண்ணன் ஐஸ்வர்யா தங்கியிருக்கும் வீட்டிற்கு சென்று ஏன் இவ்வளவு செலவு செய்றீங்க என கேட்கிறார். பிறர் ஐஸ்வர்யா தனத்தை அசிங்கப்படுத்தி அனுப்பி விடுகிறார்.
உடனே ஐஸ்வர்யா மீனாவிற்கு ஃபோன் செய்து நீங்கள் தனம் அக்காவிடம் உடனே சொல்லி விட்டீர்களா அவங்க வந்த உடனே ஏன் இதையெல்லாம் வாங்குறீங்க எனக் கேட்கிறார். அவர்களுக்கு எங்க மேல பொறாமை எனக் கூறுகிறார்.
அப்படியெல்லாம் அக்கா கிடையாது அவங்க நம்மள நல்லா தான் பாத்துக்கிட்டாங்க அந்த வீட்டில குறை இருந்தாலும் எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல் நம்பல நல்லா தான் பாத்துக்கிட்டாங்க இப்படி எல்லாம் சொல்லாத என்ன கூற பிறகு ஐஸ்வர்யா போனை வைத்து விடுகிறார். இவ்வாறு இதனை பற்றி மீனா தன்னுடைய அம்மா அப்பாவிடம் கூற எப்ப பார்த்தாலும் அக்கா புராணத்தை ஆரம்பித்து விடு எனத் திட்ட இதோடு எபிசோடு நிறைவடைகிறது.