ஆணவத்தின் உச்சத்தில் ஐஸ்வர்யா.! வந்த தனத்தை அவமானப்படுத்தி அனுப்பிய சம்பவம்.. நடு ரோட்டுக்கு வர போகும் கண்ணன்

pandiyan stores
pandiyan stores

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியலில் தொடர்ந்து பல திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் தற்பொழுது ஐஸ்வர்யா ஆணவத்தின் உச்சத்தில் ஆடி வருகிறார்.

அதாவது தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மொத்தமும் சுக்கு நூறாக உடைந்திருக்கும் நிலையில் அனைவரும் அவரவர்களுடைய வேலையை செய்து வருகின்றனர் மேலும் ஜீவா தன்னுடைய மாமனாரின் வீட்டில் தங்கி வரும் நிலையில் அவர்களுடைய சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிய இருக்கிறார்.

கண்ணனும் குடும்பத்தை பிரிந்து தன்னுடைய மனைவி ஐஸ்வர்யாவுடன் தனியாக வாழ்ந்து வரும் நிலையில் இவர்கள் மிகவும் ஜாலியாக செலவு செய்து கொண்டு சுற்றி வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது மீனா வீட்டிற்கு தேவையான பொருளை வாங்குவதற்காக கடைக்கு செல்கிறார்.

அங்கு கண்ணன் மீனா பிரிட்ஜ், ஏர் கூலர் என அதிகம் செலவு செய்கின்றனர் மேலும் இவ்வளவு வாங்குவதற்கு கண்ணனிடம் பணம் இல்லாத காரணத்தினால் இஎம்ஐ-யில் வாங்கலாம் என ஐஸ்வர்யா அனைத்தையும் வாங்கி விடுகிறார் பிறகு மீனா இவர்களை பார்த்துவிட்டு பேசிக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு இவர்கள் அதிகம் செலவு செய்வதை தெரிந்துக் கொண்ட மீனா உடனே தனத்திற்கு போன் பண்ணி கண்ணன் சின்ன பையன் இப்பொழுது தான் வேலைக்கு போய் இருக்கா தேவையில்லாமல் செலவு செய்ய வேண்டாம்னு நீங்க சொல்லுங்க என கூறுகிறார். உடனே தனமும் கண்ணன் வீட்டிற்கு கிளம்புகிறார்.

அப்பொழுது தனம் ஐஸ்வர்யா-கண்ணனிடம் இதையெல்லாம் வாங்க அதிக செலவாயிருக்குமே என கேட்க அதற்கு ஐஸ்வர்யா ஆமா இஎம்ஐ-ல தான் வாங்கி இருக்கோம் மாசம் 3000, 4000 கட்டுனா போதும் என கூற பிறகு அங்கு இருந்தா தான் எது வாங்கினாலும் யோசித்து உங்க கிட்ட கேட்டு வாங்கணும் இப்ப அப்படி கிடையாதுல என அவமானப்படுத்த உடனே தனம் அங்கிருந்து கிளம்புகிறார். பிறகு ஐஸ்வர்யா கண்ணனிடம் நாம் இவ்வளவுக்கு வாங்கிட்டோம்னு அவங்களுக்கு பொறாமையா இருந்திருக்கும் என கூற அப்படி எல்லாம் கிடையாது என கண்ணன் கூறுகிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.