ஜகார்த்தனன் செய்த சதி.. வீட்டிற்குள் சொல்லாத ஜீவா.! வயிற்றில் அடிபட்டும் பொருட்படுத்தாமல் டிக் டாக் செய்யும் ஐஸ்வர்யா-கண்ணன்..

pandiyan-stores-69
pandiyan-stores-69

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் மூர்த்தி தனி ஆளாக வேலை செய்து கஷ்டப்படுகிறார் என்பதற்காக ஜீவா ஆள் ஒருவரை வீட்டிற்கு வர வைத்து வேலை கேட்க கூறுகிறார்.

அந்த நபர் மூர்த்தியிடம் ஜீவா தான் அனுப்பி வைத்ததாக கூற இதனால் பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. பிறகு அந்த பையன் மீண்டும் ஜகார்த்தனன் வீட்டிற்கு வந்து நடந்த விஷயங்களை அனைவரிடமும் கூறுகிறார் எனவே ஜகார்தனன் மாப்பிள்ளை நல்ல எண்ணத்தில் தான் செய்கிறார் ஆனால் அவங்க அப்படி நினைக்கிறாங்க என்று சொல்கிறார்.

அதே போல் மீனாவின் அம்மாவும் கூற பிறகு மீனா மாமா அப்படித்தானே என கூறி விடுகிறார். பிறகு மீனா ஜீவா இருவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டிற்கு செல்கின்றனர் அதன் பிறகு தான் தெரிய வருகிறது. ஜகார்த்தனன் வேண்டுமென்றே அந்தப் பையனை மூர்த்தியிடம் ஜீவா அனுப்பிய ஆள் என நீயாகவே சொல்ல வேண்டும் எனவும் இதனால் வேலை தருவதாகவும் கூறி இருக்கிறார்.

பிறகு அந்த பையனிடம் பணம் மற்றும் வேலையை தருகிறார். மீனா அங்கு சென்றவுடன் தனம் முல்லை இருவரும் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றனர். பிறகு மீனா ஜீவா வெளியில் நிற்பதாகவும் சீக்கிரம் கிளம்புவதாகவும் கூறுகிறார். எனவே தனம் முல்லை இருவரும் வெளியில் வந்த ஜீவாவை பார்க்க ஆனால் ஜீவா அவர்களை பார்த்துவிட்டு உடனே கிளம்பி விடுகிறார்.

இவ்வாறு இவ்வளவு தூரம் வந்தும் வீட்டிற்குள் வரவில்லை என தனம் முல்லை வருத்தப்படுகின்றனர். மறுபுறம் ஐஸ்வர்யா கண்ணன் இருவரும் வளைகாப்பு நிகழ்ச்சியை பெரிதாக நடத்த வேண்டும் என்பதற்காக பணம் சம்பாதிக்க முடிவெடுக்கின்றனர். எனவே யூட்யூபில் வீடியோ போட முடிவு எடுத்திருக்கும் நிலையில் நடனமாடிய வீடியோக்களை பதிவு செய்கின்றனர்.

அப்படி பார்க் சென்று நடனமாடி கொண்டிருக்கும் பொழுது ஐஸ்வர்யா திடீரென விழுந்து விடுகிறார் ஆனால் வலிக்கவில்லை மீண்டும் நடனம் ஆடலாம் என கூறி இருவரும் வயிற்றில் அடிபட்டதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நாளைய எபிசோடு ஐஸ்வர்யாவிற்கு வயிற்று வலி ஏற்பட பிறகு மருத்துவமனைக்கு செல்ல இருக்கின்றனர்.