விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இன்றைய எபிசோடில் ஐஸ்வர்யா கண்ணனிடம் எஃக் பீட்டர் வாங்கிக்கிட்டு வர சொன்னேன்ல எனக் கேட்க அதற்கு கண்ணன் என்னிடம் பணம் இல்லை எனக் கூறுகிறார்.
அதற்கு தான் கார்டு இருக்குல என ஐஸ்வர்யா கூற எல்லாத்துக்கும் அதையே யூஸ் பண்ண முடியாது என கண்ணன் கூறுகிறார். பிறகு நீ செலவு செய்வதற்கு பணம் பத்தவில்லை என கூற ஐஸ்வர்யா முரைக்கிறார் அதற்கு இல்லை நாம் செலவு செய்வதற்கு இன்னும் ஒரு வேலையை பாக்கணும் என கூற உடனே ஐஸ்வர்யா யூடியூப்பில் வீடியோ போடலாம் என கூறுகிறார்.
அதன் பிறகு ஐஸ்வர்யா கண்ணன் இருவரும் சேர்ந்து வீட்டில் சமைக்கும் வீடியோவை வெளியிடுகின்றனர். இதனை அடுத்து மறுபுறம் ஜனார்த்தனன் வீட்டிற்கு ஜீவா ஒரு பையனை வரவழைத்து இருக்கிறார். மேலும் ஜகார்த்தனனிடம் ஜீவா தான் தன்னை வர சொன்னதாக அவர் கூற பிறகு ஜீவா பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு ஆள் தேவை அதனால் தான் எனக் கூறுகிறார்.
நான்தான் அனுப்பி வைத்திருப்பதாக நீ கூறாமல் சரவணன் நண்பர் என கூறுமாறும் சொல்ல ஆனால் அந்தப் பையன் அங்கு சென்று ஜீவா தான் தன்னை இங்கு வர சொன்னதாக உண்மையை உலறிவிடுகிறார். எனவே இதனால் மூர்த்தி உனக்கெல்லாம் வேலை கிடையாது என அனுப்பி வைத்து விட கதிரிடம் யார் வேலை செய்யவில்லை என்றாலும் தனியாளாக நான் நின்று வேலை செய்வேன் என கூறிவிடுகிறார்.
இந்த நேரத்தில் மீனாவின் அம்மா ஜீவாவுக்காக எடுத்த நகைகளை எடுத்து தருகிறார். பிறகு ஜகார்த்தனன் உங்களுடைய சர்டிபிகேட் எல்லாம் வேண்டும் என கூற மீனா ஜிவா இருவரும் வீட்டிற்கு செல்கிறார்கள். அந்த நேரத்தில் ஜகார்த்தனன் மாப்பிள்ளை என்றால் கெத்தாக இருக்க வேண்டாமா என கூறிவிட்டு நகைகளை போடும் மாறு சொல்லுகிறார். ஜீவாவும் நகைகளை போட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியில் வர பிறகு மூர்த்தி திட்டி அனுப்பியதை பற்றி அந்த பையன் அனைவர் முன்பும் கூற இதனால் அனைவரும் கோபப்படுகின்றனர்.