விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் தற்பொழுது நான்கு அண்ணன் தம்பிகளும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வரும் நிலையில் தனம் இதனை நினைத்து வருத்தப்பட்டு வருகிறார்.
மேலும் முல்லையின் வளைய காப்பு நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் கதிர்-முல்லை இருவரும் பேசிக் கொண்டிருக்க இந்த நேரத்தில் தனம் இவர்களுக்கு சுத்தி போடுகிறார். பிறகு கதிர் நாங்க உங்களுக்கு சுத்தி போடுறோம் என கூறி மிகவும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.
இதனை அடுத்து ஐஸ்வர்யா ஒரு பக்கம் அழுது கொண்டு படுத்திருக்கிறார் கண்ணன் அது தெரியாமல் யாரோ அழுவுற சத்தம் கேட்குது உனக்கு கேக்குதா இஸ் இந்த வீட்டில பேய் இருக்கு போல என கூறுகிறார். அதன் பிறகு தான் ஐஸ்வர்யா அழுவது கண்ணனுக்கு தெரிய வருகிறது. ஏன் அழுவுற என கேட்க எனக்கு யாரு வலையகாப்பு பிரசவலாம் பாப்பாங்க என கேட்கிறார்.
அது எல்லாம் அண்ணி பார்த்துப்பாங்க நீ கவலைப்படாதே எனக்கு கூற அதன் பிறகு நான் உன்னை பத்திரமா பார்த்துக்கிறேன் உன்னுடைய வளைய காப்பு நிகழ்ச்சியை சூப்பரா நடத்துற வேலைக்கு ஆள் வச்சுக்கலாம் நீ பயப்படாத எனக் கூறி சமாதானப்படுத்துகிறார். இதனை அடுத்து மறுபுறம் ஜகார்த்தனம் எனக்கு எப்ப எது வேணாலும் ஆகும் எனவே என்னுடைய மொத்த சொத்தையும் உங்களுடைய பெயரில் எழுதி வைத்திருப்பதாக ஜீவாவுக்கு அதிர்ச்சி கொடுக்கிறார்.
ஜீவா எதற்கு என்னுடைய பெயரில் எழுதுனீங்க மீனா இல்லினா அத்த பேர்ல எழுதி வைக்க வேண்டியதானே என கேட்கிறார் அதற்கு ஜகார்த்தனன் நீங்க எனக்கு மாப்பிள்ளை மட்டும் இல்லை மகனும் தான் நீங்க தான் மகனா இருந்து எனக்கு எல்லாத்தையும் செய்ய வேண்டும் என கூற இதனை நினைத்து ஜீவா கண் கலங்குகிறார்.