விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் தற்பொழுது மிகவும் கோலாகலமாக முல்லையின் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்று முடிந்துள்ளது.
அதாவது வளைய காப்பு நிகழ்ச்சியின் மூலம் ஜீவா, கண்ணன் என அனைவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என கதிர், தனம் காத்து வந்தனர். அந்த வகையில் ஜீவா மீனாவுடன் வளைகாப்பு நிகழ்ச்சி கிளம்ப அந்த நேரத்தில் ஜகார்த்தனன் நெஞ்சு வலி வந்தது போல நாடகம் நடத்தி இவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு மருத்துவர்கள் எந்த பிரச்சனையும் இல்லை எனக் கூறியதால் பிறகு இவர்கள் முல்லையின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வருகின்றனர்.
அங்கு இவர்கள் வருவதை எதிர்பார்த்துக் காத்திருந்த தனம், கதிர் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் அனைவரும் பரிசாக நகைகள் பணங்களை கொடுக்க அந்த நேரத்தில் ஜீவா தான் எடுத்துட்டு வந்த நகையையும் அனைவரிடமும் காமித்துவிட்டு கொடுக்கிறார் இதனால் கதிருக்கு மன கஷ்டம் ஏற்படுகிறது.
அதேபோல் ஐஸ்வர்யா கண்ணன் இருவரும் அனைவரிடம் காட்டிவிட்டு தங்களுடைய பரிசையும் கொடுக்கின்றனர். அதன் பிறகு அனைவரும் ஒன்றாக இணைந்து நடனமாடும் நிலையில் இதனைப் பார்த்து தனம், மீனா, முல்லை என அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.
ஆனால் முல்லையின் அக்கா மல்லிகா, அம்மா என அனைவருக்கும் பொறாமையாக உள்ளது. இந்த நேரத்தில் கதிர், ஜீவா, கண்ணன், மூர்த்தி நான்கு பேரும் ஒன்றாக நடனம் ஆடுவதை பார்த்து தனம் கண்கலங்க அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். பிறகு அனைவரும் ஒன்றாக அமர்ந்து மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஜீவா மீனாவை கிளம்பலாம் என கூற அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.