மீனா-ஜீவாவை வளைய காப்பு நிகழ்ச்சிக்கு அனுப்ப விடாமல் நாடகம் போட்ட ஜகார்த்தனன்.! கதறும் மீனா.. தனத்தை அசிங்கப்படுத்திய முல்லையின் அம்மா

pandiyan-stores-34
pandiyan-stores-34

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்பொழுது கதிர் முல்லையின் வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடக்க இருக்கும் நிலையில் இந்நிகழ்ச்சியில் ஜீவா-மீனா கலந்து கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி உள்ளது.

அதாவது ஜீவா முல்லையின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு போக வேண்டாம் என முடிவெடுத்த நிலையில் பிறகு மீனா போய் தான் ஆக வேண்டும் இது நம்முடைய கடமை எனக் கூறியதால் ஜீவா வளைகாப்பு நிகழ்ச்சிக்கு போக ஒப்புக்கொள்கிறார். இன்றைய எபிசோடில் முல்லையின் அம்மா இன்னும் வீட்டில் இருப்பவர்கள் வரவில்லையே என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.

இவர்கள் வந்தவுடன் தனத்திடம் ஒருவர் அடுத்தது உனது வளைய காப்பா என கேட்க அதற்கு முல்லையின் அம்மா அதற்கு தான் ஏற்கனவே வளைகாப்பு நடந்திருச்சு எதற்கு இரண்டாவது குழந்தைக்கு வளையாப்பு என கூறிவிட்டு செல்கிறார் இதனால் தனம் சோகமாகிறார்.

இவனை அடுத்து ஜீவா வந்து விடுவாரா என தனம் வழியை பார்த்துக் கொண்டிருக்க இதனை பார்த்த முளையின் அம்மா வரவேண்டியவங்க வரலைனா போய் பார்க்கலாம் இல்லன்னா போன் பண்ணி பேசலாம்ல என கேட்காததற்கு தனத்தின் அம்மா வாயும் வைருமா இருக்கிற என் மகள் தான் எல்லா வேலையும் செய்யணுமா நீங்க போய் பாருங்க என கூறுகிறார்.

பிறகு தனம் தனது அம்மாவை அழைத்துக் கொண்டு வெளியில் செல்கிறார் இதனை அடுத்து மீனா ஜீவா இருவரும் வளைய காப்புக்கு கிளம்ப அப்பொழுது மீனாவின் அம்மா போய்தான் ஆக வேண்டுமா என கேட்கிறார். அதற்கு மீனாவும் ஆமாம் எனக் கூற பிறகு பத்திரமா போயிட்டு வருமாறு சொல்கிறார்.

இதனை அடுத்து ஜகார்த்தனன் பார்த்து போயிட்டு வாங்க என சொல்ல உடல்நிலை சரியில்லாதது போல் நடிக்கிறார். பிறகு நீங்கள் வளைய காப்பு நிகழ்ச்சிக்கு போயிட்டு வாங்க என கூற ஜீவாவும் மீனாவும் கிளம்புகின்றனர். இந்த நேரத்தில் நெஞ்சை வலிப்பதாக கூறி சாய்ந்து கொள்கிறார் உடனே ஜகார்த்தனனை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு செல்கிறார்கள் இதோட இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.