விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் தற்போது நான்கு அண்ணன் தம்பிகளும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது முல்லையின் வளைய காப்பு நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடைபெற இருக்கிறது.
எனவே நிகழ்ச்சிக்கு ஜீவா வருவாரா மீண்டும் இவர்கள் பழைய நிலைமைக்கு மாறுவார்களா என்பது குறித்த எபிசோடுகளுடன் மிகவும் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோடில் கதிர் ஜீவாவை சந்தித்து பேச நிலையில் அனைவருக்கும் ஒரே மாதிரியான டிரஸ் எடுக்கப்பட்டுள்ளது எனவே அந்த ட்ரெஸ்ஸை ஜீவா நிகழ்ச்சிக்கு போட்டுட்டு வருவார் என கதிர் எதிர்பார்க்கிறார்.
மேலும் இதனை தொடர்ந்து கதிர் கண்ணனுக்கு கொடுக்க வேண்டிய சட்டையை கொடுக்க ஐஸ்வர்யா வீட்டிற்கு செல்ல அங்கு ஐஸ்வர்யா அவருடைய சித்தி இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். கதிர் வந்தவுடன் குடும்பமே பிரிஞ்சிடுச்சு இதுல ஒரே மாதிரி டிரஸ் வேற போட்டுக்கணுமா பிரிஞ்சு தனித்தனியா வாழ்ந்தாலும் ஒரே மாதிரி டிரஸ் போட்டுக்கிட்டு எல்லாருக்கும் நாங்க ஒன்னா தான் இருக்கும் என காமிக்க போறாங்களா என ஐஸ்வர்யாவின் சித்தி கூற அதற்கு ஐஸ்வர்யா ஆமா சித்தி நான் கண்ணன இந்த டிரஸ் வேணா வேற டிரஸ் போட சொல்லப்போற சொல்ல போனால் இந்த டிரஸ்ச நான் அவன் கிட்ட காமிக்க மாட்டேன் என கூறுகிறார்.
மறுபுறம் மூர்த்தி தனம் இருவரும் சேர்ந்து முல்லைக்கு தேவையான நகைகளை எடுத்து விட்டு வருகிறார்கள் அப்பொழுது வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க இருந்த பணத்தில் தான் இந்த செலவு செய்ததாக கூற அதற்கு தனம் ஏதாவது பணம் வேணும்னா சொல்லுங்க நம்ப என்னுடைய நகைய அடகு வச்சுக்கலாம் என கூறுகிறார். அதற்கு மூர்த்தி உன்ன கல்யாணம் பண்ணுன அடுத்த நாளே என்கிட்ட உன்னுடைய நகையை கொடுத்துட்ட அதுல இருந்து தம்மிங்க படிப்பு அதுக்கு இருக்குன்னு உன்னோட நகை அடகு வெச்சாச்சு இப்படியெல்லாம் நீ செய்தும் உன்னை யாரும் புரிஞ்சுக்கல அதுதான் வேதனையாக இருப்பதாக கூறுகிறார்.
மருபுற மண்டபத்தில் டெக்கரேஷன் வேலை செய்பவர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கும் நிலையில் யாரும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை எனவே கதிர் டெகரேஷன் வேலைகளை செய்ய இந்த நேரத்தில் மூர்த்தியும் வந்து அவருக்கு உதவி செய்கிறார். பிறகு மீனா ஜீவாவிடம் நாம நாளைக்கு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு போகிறோம்ல என கேட்க அதுயெல்லாம் முடியாது என கூற இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.