நன்றியை மறக்காத மீனா.. சூப்பர் மார்க்கெட்டுக்கு தேடிச்சென்று ஜீவாவிடம் அசிங்கப்படும் கதிர்.!

pandiyan-stores
pandiyan-stores

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியலில் தற்பொழுது நான்கு அண்ணன் தம்பிகளும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

எனவே பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதற்காக தனம், கதிர் இருவரும் முயற்சி செய்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் முல்லையின் வளையாப்பு தற்போது மிகவும் கோலாகலமாக நடைபெற இருக்கும் நிலையில் இதன் மூலம் அனைவரும் ஒன்றிணைந்து விடலாம் என்ற கனவில் தனம் இருக்கிறார்.

இந்நிலையில் முல்லைக்கு நடக்க இருக்கும் வளைகாப்பு பற்றி ஜீவாவிடம் கூற ஜீவா வர முடியாது என சொல்லி விடுகிறார் எனவே இதனால் வருத்தத்தில் இருந்து வரும் கதிர் முல்லையிடம் சொல்லி கவலைப்படுகிறார். இதனை அடுத்து மீனா இந்த வளைகாப்புக்கு போய் தான் ஆக வேண்டும் ஏனென்றால் அவர்கள் என்னை நன்றாக பார்த்துக் கொண்டார்கள்.

என்னை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் யாருக்கும் கிடையாது ஆனால் தனம் அக்கா எந்த வேலையும் விடாமல் பார்த்துக் கொண்டார்கள். இப்படி இருக்கும் பொழுது நாம் எப்படி வளைய காப்பு நிகழ்ச்சிக்கு போகாமல் இருக்க முடியும் போய் தான் ஆக வேண்டும் என கூற ஜீவா அதயெல்லாம் முடியாது என கூறிவிட்டு கடைக்கு கிளம்புகிறார்.

இந்த நேரத்தில் கதிர் ஜீவாவை பார்ப்பதற்காக கடைக்குச் செல்ல ஜீவாவிடம் மீண்டும் மீண்டும் உன்னை தேடி வரேன் என கோபப்படாத நீ வளைய காப்புக்கு வரலை எனக் கூறியதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. நீ வேண்டுமானால் என்னை வேண்டாம் என ஒதுக்கலாம் ஆனால் என்னால் முடியாது எனக்கூறி கதிர் கண்கலங்கியும் கூட ஜீவா எதுவும் கூறாமல் அமைதியாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.