விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள் பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நிலையில் முல்லைக்கு வளைகாப்பு நடத்துவதற்காக அவருடைய அம்மா முடிவெடுத்துள்ளார்.
எனவே இதனைப் பற்றி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்களிடம் கூற அதற்கு இவ்வளவு சீக்கிரமா வேண்டாம் என மறுக்கின்றனர். ஆனால் தன்னுடைய மகளுக்கு வளைகாப்பு வைத்து தான் ஆக வேண்டும் என அடம் பிடித்து பிறகு வளைகாப்பு நடத்த முடிவெடுக்கிறார்கள். எனவே எப்படியாவது இந்த வளைகாப்பு நிகழ்ச்சிக்கு ஜீவா, கண்ணன் வரவேண்டும் என்பதற்காக கதிர், தனம் முயற்சி செய்கிறார்கள்.
எனவே இதனைப் பற்றி ஜீவா மீனாவிடம் கூற அதற்கு ஜீவா வர முடியாது என மறுத்து விடுகிறார். மேலும் இவர்கள் கண்ணன் ஐஸ்வர்யாவை சந்தித்து வளைய காப்பு பற்றி கூற கண்ணன் கண்டிப்பாக வந்து விடுவதாக கூறிவிடுகிறார் மேலும் இவர்கள் முல்லைக்கு மோதிரம் எடுத்துள்ளார்கள்.
இதனை அடுத்து இன்றைய எபிசோடில் மீண்டும் தனம் ஜீவா மீனாவுக்கு செல்வதற்காக வீட்டிற்கு செல்ல அங்கு கயல் பெரியம்மா என ஓடி வந்து கட்டி பிடித்துக் கொள்கிறார். இது மீனாவின் அம்மாவுக்கு பிடிக்கவில்லை. பிறகு வளைய காப்புக்கு வந்துவிட வேண்டும் என ஜீவாவிடம் கூற கையெடுத்து கும்பிட்டு என்னை வற்புறுத்தாதீங்க எனக் கூறி விடுகிறார்.
எனவே இதனால் தனம் வருத்தப்பட இந்த நேரத்தில் ஜகார்த்தனனும் நான் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை பிரிக்க வேண்டும் என நினைக்கவில்லை ஆனால் என்னுடைய மாப்பிள்ளை, மகள், பேத்தி ஆகியோர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என விரும்புவதாகவும் அவரை நிகழ்ச்சிக்கு வர சொல்லி வற்புறுத்த வேண்டாம் எனக் கூற இனிமேல் அந்த குடும்பம் ஒன்று சேராது எனவும் சொல்லி விடுகிறார்.
இதனால் தனம் கண்டிப்பாக இந்த வளைகாப்பின் மூலம் நாங்கள் ஒன்று சேர்வோம் என கூறிவிட்டு சென்றிருக்கும் நிலையில் மீனா அந்த வளைய காப்பு நிகழ்ச்சிக்கு போய் தான் ஆக வேண்டும் எனவும் நம்மளுடைய வளைகாப்பு போல் முல்லையின் வளைய காப்பு மகிழ்ச்சியாக நடக்க வேண்டும் எனவும் கூற ஜீவா முடியாது என கூறுகிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.