விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்பொழுது நான்கு அண்ணன் தம்பிகளும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் எப்படியாவது மீண்டும் பழையபடி ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பதற்காக கதிர், தனம் இருவரும் முயற்சி செய்து வருகின்றனர். என்னதான் அசிங்கப்பட்டாலும் இருவரும் ஜீவா மற்றும் கண்ணன் வீட்டிற்கு சென்று அவர்களை மீண்டும் ஒன்றிணைந்து வாழலாம் என கேட்டு வருகின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில் இன்றைய எபிசோடில் தனம்-மூர்த்தி, கதிர்-முல்லை என அனைவரும் கோவிலுக்கு செல்லும் நேரத்தில் ஜீவா-மீனாவும் கோவிலுக்கு வருகிறார்கள். ஜீவா, மூர்த்தி இருவரும் பார்த்துக் கொள்ளும் நிலையில் பேசவில்லை எனவே வீட்டிற்கு வந்தவுடன் கோவிலுக்கு நம்ம கொஞ்ச நேரம் கழித்து போய் இருக்க வேண்டும் என மீனாவிடம் ஜீவா கூறுகிறார்.
நான் அவரோட தம்பி தானே என்கிட்ட பேசி இருக்கலாம் எனக் கூற அதே போல் தனத்திடம் மூர்த்தியும் அவன் என் தம்பி தானா அவனே பேசி இருக்கலாம் என கூறுகிறார். இந்நிலையில் வீட்டிற்கு சென்றவுடன் அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் முல்லையின் அம்மா, அப்பா இருவரும் வருகிறார்கள்.
கோவிலுக்கு சென்று வந்ததாகவும் நல்லபடியா குழந்தை பிறக்க வேண்டும் எனவும் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் முல்லைக்கு வளைகாப்பு நடத்தலாம் என கூற அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். பிறகு இப்பொழுது வேண்டாம் என அனைவரும் சொல்லியும் முல்லையின் அம்மா கேட்கவில்லை.
எனவே வேறு வழி இல்லாமல் முல்லையின் வளைய காப்பை நடத்த அனைவரும் முடிவெடுக்கிறார்கள். இதனைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் இது நல்ல சகுனமாக தான் தெரிகிறது இதன் காரணத்தினால் ஜீவா, கண்ணன் இருவரும் நம்முடன் சேர்ந்து விடுவார்கள் என தனம் கூறி மகிழ்ச்சியடைய அதற்கு மூர்த்தி சண்டை போடுகிறார்.
மாசமா இருக்கிற நேரத்துல கண்டதையும் யோசிக்காத வராதவங்கள வந்துருவாங்க வந்துருவாங்கன்னு நீயே நினைக்கிற என சொல்லிவிட்டு கிளம்புகிறார். உடனே முல்லை உங்களுடைய நல்லதுக்காக தான் அக்கா மாமா சொல்றாங்க எனக் கூற இதனால் தனம் வருத்தமடைகிறார். இவ்வாறு இதன் மூலம் ஜீவா, கண்ணன் மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் இணைவார்களா? என்பதை இனிவரும் எபிசோடுகளில் தெரிந்துக் கொள்ளலாம்.