விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியலில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது நான்கு அண்ணன் தம்பிகளும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் குடும்பமே சுக்கு நூறாக உடைந்துள்ளது.
அதாவது மூர்த்திக்கு துணையாக இருந்த ஜீவா மூர்த்தி செய்த சில விஷயங்களால் குடும்பத்தை விட்டு பிரிந்தார். செலவுக்கு கொஞ்சம் கூட பணம் தராமல் இருந்து வந்த நிலையில் இதனால் ஜீவா பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை விட்டு பிரிந்தார். அதேபோல் கடைசியில் ஜகார்த்தனன் நினைத்தது போலவே தற்பொழுது ஜீவா பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை விட்டு பிரிந்து மாமனாரின் வீட்டில் அடைக்கலாம் ஆகிவிட்டார்.
மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூன்று மருமகள்களும் கர்ப்பமாக இருக்கும் நிலையில் இவர்களை மீனா தான் பார்த்துக் கொண்டார். இந்நிலையில் ஜீவா-மீனா, கண்ணன்-ஐஸ்வர்யா குடும்பத்தை விட்டு பிரிந்தது அனைவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது எனவே மறுபடியும் ஜீவா கண்ணன் வீட்டிற்கு வரவேண்டும் என்பதற்காக கதிரும் தனமும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் அவர்களிடம் பேச செல்லும் பொழுது தொடர்ந்து அசிங்கப்படுத்தி வந்தாலும் கதிரும், தனமும் வீட்டை விட்டுப் போன ஜீவா கண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளனர். அந்த வகையில் தனம், மூர்த்தியை மகிழ்ச்சி படுத்த வேண்டும் என்பதற்காக கயல் பாப்பாவை கதிர் வீட்டிற்கு அழைத்து வருகிறார். இதற்கு ஜீவா கடுப்பாகாமல் பெரியவங்க பண்ணின தப்புக்கு குழந்தை என்ன பண்ணும் என கூற இதனால் ஷாக்காகிறார் ஜகார்த்தனன்.
மேலும் எப்படி அண்ணன் தம்பியை பிரிக்கிறது என ஜஹார்த்தனன் யோசிக்கும் நேரத்தில் கதிர் வீட்டிற்கு செல்ல ஜகார்த்தனன் கலாய்க்கிறார். கதிர் ஒரே போடாக என் அண்ணனை பற்றி எனக்கு தெரியும் அது கோபமாகத்தான் இருக்கு சீக்கிரமே வீட்டுக்கு வந்து விடும் என ஜகார்த்தனிடம் சவால் விட நிலையில் இவரை தொடர்பு முல்லைக்கு வளைகாப்பு நடத்த திட்டமிட்டு இருக்கும் தனம் ஜீவாவை கூப்பிடுவதற்காக வீட்டிற்கு போகிறார்.
அங்கு ஜகார்த்தனன் நீங்களும் ஜீவா மாப்பிள்ளையை வீட்டுக்கு வர வைக்க என்னென்னமோ பண்றீங்க ஆனா அவரு வர மாட்டேங்குறாரு என்கிறார் பிறகு தனமும் கடுப்பாகி வளைகாப்புக்கு வருவான் நாங்க ஒண்ணா இருக்கிறதை பாக்க தான் போறீங்க என சவால் விட்டுவிட்டு கிளம்புகிறார்.