கண்ணன் எடுக்க போகும் முடிவு என்ன.? பரபரப்பான எபிசோடுகளுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் நான்கு அண்ணன் தம்பிகளின் பாச உறவினை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. அந்த வகையில் ஒற்றுமையாக இருந்து வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தற்பொழுது பிரிந்து சுக்குநூறாக உடைந்துள்ளது.

அதாவது ஜீவா பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த நிலையில் எனவே மூர்த்தியிடம் அதனைப் பற்றி கூறி சண்டை போட்டார். இந்நிலையில் மீனா தங்கையின் திருமணம் மிகவும் சிறப்பாக நடைபெற்ற நிலையில் அதில் ஜீவா-மீனா பெயரை விட்டுவிட்டு மற்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் தம்பி மற்றும் மனைவிகளின் பெயர்களை வைத்து கண்ணன் மொய் எழுதியதால் இதனால் பெரிய பூகம்பம் ஏற்பட்டுள்ளது.

அதாவது மீனாவின் அப்பா ஜீவா-மீனா பெயரில் மட்டும் மொய் போடவில்லை என கூறிய நிலையில் இதனை தெரிந்து கொண்ட ஜீவா மண்டபத்தில் அனைவரும் முன்பும் மூர்த்தியிடம் சண்டை போடுகிறார் இதற்கு மேல் அந்த வீட்டிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது இவர்கள் இருவரும் நான் உங்களுடைய தம்பிகள் என கூறி விடுகிறார்.

அதேபோல் வீட்டிற்கு வந்தவுடன் கண்ணன் செய்த தவறை தனம் சுட்டிக் காட்டுகிறார் உடனே ஐஸ்வர்யா சும்மா நிறுத்துங்க அக்கா எப்ப பாத்தாலும் கண்ணனை திட்டிக்கொண்டே இருக்கீங்க நாங்க இங்கு அட்ஜஸ்ட் செய்துதான் இருக்கிறோம் என கூறுகிறார். உடனே மூர்த்தி அப்படி யாரும் கஷ்டப்பட்டு இங்கு இருக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறியதால் ஐஸ்வர்யா கோபப்பட்டு பையை தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு கிளம்புகிறார்.

பிறகு கண்ணன் போக வேண்டாம் என தடுக்க உனக்கு நான் வேண்டுமா? இல்லை இந்த குடும்பம் வேண்டுமா? என ஐஸ்வர்யா கேட்க அதற்கு கண்ணன் என்ன முடிவெடுக்க போகிறார் என்பதை வைத்து தான் இந்த வார எபிசோட் ஒளிபரப்பாக இருக்கிறது. இவ்வாறு பரபரப்பான எபிசோடுகளுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.