முல்லையின் வயிற்றில் தாக்கிய ரவுடிகள்.! குழந்தைக்கு என்ன ஆனது.? இனி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோடுகள் இதுதான்..

PANDIYAN-STORES-4
PANDIYAN-STORES-4

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தொடர்ந்து ஏராளமான பிரச்சனைகள் அரங்கேறி வருகிறது அப்படி தற்பொழுது ஐஸ்வர்யா கண்ணனால் ஒட்டுமொத்த குடும்பமும் கடனில் இருந்து வருகிறது. அதாவது ஐஸ்வர்யா ஆடம்பரமாக வாழ வேண்டும் என நினைத்து கிரீடிட் கார்டு மூலம் தன்னுடைய வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கியதால் ஆபிஸர்கள் விரைவில் கட்ட வேண்டும் என கூறி வந்தார்கள்.

ஆனால் இதனை தள்ளிக் கொண்டே போனதால் ஐஸ்வர்யா கண்ணனிடம் அவர்கள் தவறாக பேச இதனால் கோபப்பட்ட கண்ணன் அந்த ஆபிஸர்களை அடிக்கிறார் அந்த ஆபீஸர்கள் இருவரும் சேர்ந்து கண்ணனை அடித்து விடுகிறார். இதனை தெரிந்து கொண்ட கதிர் கண்ணனை அழைத்துக் கொண்டு சென்று அந்த ஆபீசர்களை அடித்து நொறுக்கி விடுகிறார்.

எனவே இவர்கள் போலீஸ் ஸ்டேஷனில் கேஸ் கொடுக்க கதிர் அரெஸ்ட் செய்யப்படுகிறார் எனவே கதிரை வெளியில எடுக்க வேண்டும் என்றால் ஐந்து லட்ச ரூபாய் பணம் தர வேண்டும் என ஆபிஸர்கள் கூற பிறகு மூர்த்தி அங்கு இங்கு அலைந்தும் பணம் கிடைக்கவில்லை. எனவே வேறு வழியில்லாமல் தனத்தின் நகையை அடகு வைத்துவிட்டு கதிரை வீட்டிற்கு அழைத்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் பிறகு கதிர் ஐஸ்வர்யா, கண்ணனை தனது வீட்டிற்கு அழைத்து வந்திருக்கும் நிலையில் ஐஸ்வர்யா வீடியோ எடுத்து யூட்யூபில் அப்லோட் செய்கிறார். எனவே வீட்டில் என்ன நடந்தாலும் அதனை யூட்யூபில் வெளியிட்டு வருவதால் மூர்த்தி, முல்லைக்கு இது பிடிக்கவில்லை இவ்வாறு இந்த பிரச்சனைகள் போய்க் கொண்டிருக்கும் நிலையில் இதற்கு மேல் என்ன நடக்கப்போகிறது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது கதிர் மற்றும் முல்லை செக்கப் செய்ய வேண்டும் என்பதற்காக மருத்துவமனைக்கு செல்கிறார்கள் அங்கு ரவுடிகள் முல்லையை தாக்க வயிற்றில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட குடும்பத்தினர்கள் அனைவரும் குழந்தைக்கு என்ன பிரச்சனை என்ன தெரியாமல் பதட்டத்தில் இருந்து வருகிறார்கள். இறுதியாக முல்லைக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் பிரசவம் நடந்து பெண் குழந்தை பிறந்து விடுவது போன்ற இது போன்ற காட்சிகள் இதற்கு மேல் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.