தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சியாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் டிவிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சுவாரசியமான சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் என பலவற்றை வழங்கி வருவதால் விஜய் டிவிக்கு என தனி மவுசு இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கப்பட்டு அண்ணன், தம்பி உறவுகளினையும் கூட்டுக் குடும்பத்தையும் மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியலுக்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. மூர்த்தி- தனம், ஜீவா- மீனா, கதிர் – முல்லை, கண்ணன்- ஐஸ்வர்யா என நான்குர் அண்ணன் தம்பிகளும் அவரவர்கள் மனைவியுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார்கள். மேலும் இவர்களுக்கிடையே சண்டைகள் வந்தால் மிகவும் மகிழ்ச்சியாக போய்க்கொண்டு இருந்தது.
ஆனால் மீனாவின் அப்பா செய்த சதி திட்டத்தால் கதிர் மட்டும் தற்பொழுது வீட்டை விட்டு வெளியேறி வாடகை வீட்டில் இருந்து வருகிறார். மேலும் புதிதாக ஹோட்டல் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார் இவ்வாறு சுவாரசியமாக இந்த சீரியல் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியல் துவங்கப்பட்டு இன்றுடன் நான்கு வருடங்கள் நிறைவடைகிறது.
அதோடு மட்டுமல்லாமல் 1000 எபிசோடுகளை கடந்துள்ளது. எனவே இந்த சீரியல் நடித்து வரும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் சோசியல் மீடியாவில் அலப்பறை செய்து வருகிறார்கள். அந்த வகையில் அவர்கள் அனைவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
மேலும் விஜே சித்ரா மட்டும் இல்லையே என வருத்தமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள். இவ்வாறு இந்த சீரியல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைவதற்கு முக்கிய காரணமே பிஜே சித்ரா தான் என்று கூற வேண்டும். இவ்வாறு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் 1000 எபிசோடுகளை தாண்டி தற்பொழுது வரையிலும் மாற்ற அனைத்து சீரியல்களுக்கும் டப் கொடுத்து வருகிறது.