தொலைக்காட்சிகளுக்கு இடையே முதல் இடத்தை பிடிப்பதற்காக புதிய சீரியல்கள், புதிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். அப்படி ஒளிபரப்புவதால் டிஆர்பியில் முதலிடத்தை பிடித்து விடலாம் என பல தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் நீண்டகாலமாக டிஆர்பி முதலிடத்தில் இருக்கும் தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி நிறுவனம் தான். ஆனால் சில காலமாக தரமான நிகழ்ச்சிகளை கொடுப்பதிலிருந்து சன் தொலைக்காட்சி நிறுவனம் தடுமாறி வருகிறது இதற்கு காரணம் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலமானவர்களை வைத்து நிகழ்ச்சி நடத்துவது தான்.
அதுமட்டுமில்லாமல் நடிகர், நடிகைகளை அழைத்து வந்தால் முதலிடத்தில் வந்துவிட முடியுமா என கேட்கிறார்கள் மற்ற டிவி சேனல்கள். இந்த நிலையில் மற்ற தொலைக்காட்சி நிறுவனங்கள் புதிதாக ரியாலிட்டி ஷோ, சீரியல் என ஒளிபரப்பி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.
அதிலும் விஜய் தொலைக்காட்சி என்றால் ரியாலிட்டி ஷோவுக்கு ராஜா என்றே கூறலாம் அந்த அளவு புதிது புதிதாக கான்சப்ட் யோசித்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். இன்னும் எத்தனை நாளைக்கு தான் பட புரமோஷன் களையும் புது படங்களையும் ஒளிபரப்பிய பி ஆர் பி எல் இடம் பிடிப்பார்கள் அந்த வகையில் சன் தொலைக்காட்சி நிறுவனம் டிஆர்பி ரேட்டிங்கில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
முதல் இடத்தில் எப்பொழுதும் சன் தொலைக்காட்சி நிறுவனம் தான் இருந்து வந்தது இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த கூக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் சன் தொலைக்காட்சி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது முதலிடத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இடம் பிடித்துள்ளது. இந்த நிகழ்ச்சியை கோடிக்கணக்கான ரசிகர்களை பார்வையாளர்களாக பெற்றுள்ளது.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி மூலம் விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பி யில் வேற லெவல் கெத்து காட்டி வருகிறது முதலிடத்தில் இருந்த சன் தொலைக்காட்சி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டு விஜய் தொலைக்காட்சி முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த தகவல் விஜய் டிவி ரசிகர்களிடையே கொஞ்சம் சந்தோஷத்தை கொடுத்துள்ளது.