தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் தொடர்ந்து போட்டி போட்டுக் கொண்டு பல சீரியல்களை இயக்கி வருகிறார்கள். அந்த வகையில் தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி தொலைக்காட்சியா வந்து கொண்டிருப்பது விஜய் டிவி.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் சில சீரியல்கள் முடியவுள்ள நிலையில் புதிதாக சில சீரியல்கள் அறிமுகமாக உள்ளது.
இந்நிலையில் பல காலங்களாக இந்த சீரியல் எப்பொழுது முடியும் என்று எதிர் பார்த்து வந்த ரசிகர்களுக்கு தற்பொழுது இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்த வாரம் சஞ்சீவ் நடித்து வரும் காற்றின் மொழி சீரியல் நிறைவு பெறவுள்ளது.
இந்த சீரியல் நடிக்கும் கதாநாயகி ஊமையாக நடித்திருந்ததால் மிகவும் வித்தியாசமாக இந்நாடகம் இருந்தது. அந்த வகையில் இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்று வந்தது. பிறகு போகப்போக மிகவும் போரடித்துவிட்டது எனவே ரசிகர்கள் சீக்கிரதில் இந்த நாடகத்தை முடித்து விடுங்கள் என்று கூறி வந்தார்கள்.
இந்நிலையில் இந்த சீரியல் நிறைபெற உள்ளது. எனவே இந்த சீரியலுக்கு பதிலாக தற்பொழுது வேலம்மாள் என்ற சீரியல் அறிமுகமாக உள்ளது. இந்த சீரியலில் மௌனராகம் சீரியலின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரைக்கு அறிமுகமாகி தற்போது பிரபலமடைந்து உள்ளவர் கிருத்திகா.
இவர் மௌனராகம் சீரியலில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த மக்களையும் வெகுவாக கவர்ந்தார். இவர்தான் தற்பொழுது இந்த சீரியலில் வேலம்மாள் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அந்தவகையில் இந்த சீரியல் அடுத்த வாரம் திங்கட்கிழமையில் மாலை 6 மணியில் இருந்து ஒளிபரப்பாக உள்ளது.
எனவே தற்போது ஒளிபரப்பாகி வரும் அனைத்து நாடகங்களையும் ஓவர்டேக் செய்து டிஆர்பி-யில் முன்னணி நாடகமாக வலம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேலம்மாள் – புத்தம் புதிய மெகா தொடர்.. ஏப்ரல் 12 முதல் திங்கள் – வெள்ளி வரை மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில… #Velammal #VijayTelevision pic.twitter.com/SL68Wdrle6
— Vijay Television (@vijaytelevision) April 9, 2021