தமிழ் சின்னத்திரையில் முக்கியமான தொலைக்காட்சியாக இருந்து வரும் விஜய் டிவி தொடர்ந்து வித்யாசமான கதை அம்சம் உள்ள சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது இப்படிப்பட்ட நிலையில் சன் டிவியின் சீரியல்கள் தொடர்ந்த டிஆர்பியில் முன்னணி வகித்து வரும் நிலையில் தற்போது அதனை முறியடிக்க வேண்டும் என்பதற்காக தரமான கதை அம்சம் உள்ள புதிய சீரியல்களை விஜய் டிவி களம் இறக்க இருக்கிறது.
அந்த வகையில் தொடர்ந்து சன் டிவி மற்றும் விஜய் டிவி தரமான கதை அம்சமுள்ள ஏராளமான புதிய சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது மேலும் அந்த சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது விஜய் டிவி நான்கு புதிய செய்திகளை அறிமுகப்படுத்த இருக்கிறது.
அந்த வகையில் சிறகடிக்க ஆசை, பொன்னி, விக்ரம் வேதா மற்றும் ஆகா கல்யாணம் உள்ளிட்ட சீரியல்கள் இனி வரும் வாரங்களில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கிறது. இந்நிலையில் ஆஹா கல்யாணம் சீரியல் Star Jalsha தொலைக்காட்சியில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த சீரியலான Gaatchora சீரியலின் ரீமேக் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சீரியலில் 3 கதாநாயகிகள் மற்றும் 3 கதாநாயகர்கள் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது அந்த வகையில் இந்த சீரியலில் சிப்பிக்குள் முத்து சீரியலில் நடித்த பிரபலம் அடைந்த ஜெய் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது மேலும் இதனை தொடர்ந்து இசையருவி, ட்யூன்ஸ் 6 ஆகிய சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ராம் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் கதாநாயகிகளாக புதுமுக நடிகைகளான காயத்ரி மற்றும் சில்லுனு ஒரு காதல் சீரியல் நடிகை தர்ஷினி கௌடா ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். ஜெய் இதற்கு முன்பு சிப்பிக்குள் முத்து சீரியலில் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்த நிலையில் மீண்டும் ஆஹா கல்யாணம் சீரியலில் நடிக்க இருக்கிறார்.