விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வந்துள்ளது. இதனை தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி சீரியலாக இடம்பிடித்துள்ளது. இந்த சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து வருவதால் ரசிகர்கள் மிகவும் ரசித்து நல்ல ஆதரவை தெரிவித்து வந்தார்கள்.
இதில் தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் நடந்த எல்லா திருமணமும் எல்லோரும் எதிர்பார்க்காத அளவில் பரபரப்பாக தான் நடந்தது அதுபோல் காயத்ரிக்கும் கத்திக்கும் அப்படிதான் நடந்தது சில காரணங்களால் வெளியில் சென்ற கத்தி இன்றுவரை சீரியலுக்கு வரவில்லை. இதனைத் தொடர்ந்து சரண்யாவுக்கு திருமணம் ஆக உள்ளது.
இதைத்தொடர்ந்து சரண்யா ஒருவரை காதலித்து வந்தார். அந்த காதல் திருமணம் வரையும் வந்து சரண்யா வீட்டில் ஒத்துக்கொண்டு கல்யாணம் நடக்க உள்ளது. அப்பொழுது சரண்யா மாயனை கல்யாணத்துக்கு வர வேண்டாம் என்று கூறினார். அதைக்கேட்டு மாயனும் கல்யாணத்துக்கு செல்லவில்லை.ஆனால் ஏதோ தவறு நடக்க உள்ளதாக மாயனுக்கு தோன்றியது.
இந்நிலையில் சரண்யா காதலித்தவர் பல பெண்களை காதலித்து திருமணம் செய்வதாக கூறி ஏமாத்தி விடுவாராம், இதை நியூஸ்பேப்பர், டிவி மூலம் அனைத்திலும் வெளிவந்தது. போலீசாரும் இவரைத் தேடி வருகிறார்கள். இதனை பார்த்த மாயன் கல்யாணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டுமென்று பதட்டத்தில் தடுமாறுகிறார். திருமணம் ஆகி விடுமா என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.
அதன்பிறகு, சரண்யாவின் திருமணம் மண மேடை வரை சென்றது. அப்போது மாயனின் அத்தை மகனான பாண்டியை கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என கூறுகிறார். மாயன் அதைக்கேட்ட பாண்டி என்ன செய்வது என்று தெரியாமல் மணமேடையில் உட்கார்ந்திருந்த மாப்பிள்ளை எட்டி உதைத்து பாண்டி தாலி கட்டி விட்டார். எல்லோரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
’சபாஷ்’என்று பாண்டியை பாராட்டி வருகிறார்கள் ரசிகர்கள் இதைத்தொடர்ந்து சரண்யா பாண்டியை ஏற்றுக்கொள்வாரா? என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வருகிறார்கள்.