முத்தழகிற்கு முன்பே அஞ்சலியை திருமணம் செய்த பூமி.! இனி நடக்கப்போவது என்ன.!

muthazhagu
muthazhagu

விஜய் தொலைக்காட்சியில் புதுவிதமாக ஒளிபரப்பப்பட்டு வரும் நாடகம்தான் முத்தழகு இந்த நாடகம் மதியம் 3.30pm அளவில் ஒளிபரப்பப்படுகிறது. அது என்னோவோ தெரியவில்லை இந்த நாடகத்தில் வரும் கதாநாயகிகள் அனைவரும் மிகவும் அழகாக உள்ளனர் அதனாலோ எண்ணமோ ரசிகர்களிடையே இந்த நாடகம் தற்போது விரும்பப்படும் நாடகமாக மாறி வருகிறது.

இந்த நாடகம் விவசாயம் செய்து வாழ்ந்து வரும் ஒரு தைரியமான பெண்ணை வைத்தும் ஒரு பணக்கார பையனை ஹீரோவாக வைத்தும் அடிப்படையாக கதை இயக்கம் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வரும் நாடகமாகும்.

ட்விட்டரில் உள்ள விஜய் தொலைக்காட்சி பக்கத்தில் வெளியான இந்த நாடகத்தின் குறுகிய அளவிலான வீடியோவில் கதாநாயகனான பூமி தனது பெற்றோர்கள் முன்னிலையில் ஒரு கோயிலில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார், அவர்கள் இருவரும் மாலை மாற்றி விட்டபின் மணப்பெண்ணை பூமியின் காலில் விழச் சொல்கிறார்கள்.

இத்தகைய தருணத்தில், விபத்தில் சிக்கிய அஞ்சலி பல நாட்களுக்குப் பிறகு கிராமத்துக்கு பூமியை தேடி வருகிறார் அந்தத் தருணத்தில்தான், அஞ்சலி இதனை பார்த்து ஆச்சரியமடைந்து அழுதுகொண்டே வேகமாக ஓடி ஒரு கிணற்றில் விழுந்து விடுகிறார் பின்னாடியே அஞ்சலி அஞ்சலி ன்னு சொல்லிக்கிட்டு ஓடிச்சென்ற பூமியும் உள்ளே குதித்து அவரைத் தூக்கிக்கொண்டு படி வழியே மேலே ஏறுகிறார்.

மேலே அஞ்சலியை அஞ்சலி ஏந்திரி அஞ்சலி அப்படின்னு சொல்லி கத்துகிறார் பூமி, அந்த நேரத்தில் எழுந்த அஞ்சலி, நீ வேற ஒரு பொண்ணோட வாழ்ந்துகிட்டு இருக்க, அவ உன் பொண்டாட்டினா அப்ப நான் யாரு அப்படின்னு சொல்லி தன் கழுத்தில் இருந்த தாலி எடுத்துக்காட்டி கேக்குறாங்க. இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர் மேலும் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.