தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு தரமான கதை உள்ள நல்ல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள் அந்த வகையில் தொடர்ந்து ரசிகர்கள் விரும்பும் வகையில் மிகவும் வித்தியாசமான கதை உள்ள சீரியல்களை ஒளிபரப்பி ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது தொலைக்காட்சி தான் விஜய் டிவி.
அந்தவகையில் சில சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றால் இரண்டாவது சீசன் மூன்றாவது சீசன் என தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது. இந்நிலையில் தற்பொழுது மௌனராகம் 2 சமீபத்திய அறிமுகமாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
முதல் சீசனில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்து வந்த ஸ்ருதி மற்றும் சக்தி கேரக்டர் தற்போது வளர்ந்து ஒரே வீட்டில் மருமகளாக வாழ்ந்து வருகிறார்கள். ஸ்ருதி எப்படியாவது சத்யாவை பழிவாங்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறார்.
அந்த வகையில் மிகவும் வற்புறுத்தி மிரட்டி தருணை திருமணம் செய்துகொண்ட ஸ்ருதியை தற்பொழுது தருணம் சரியாக பேசவில்லை என மிகவும் கோபத்தில் இருந்து வருகிறாள் எனவே சில காலங்களாக தருணிடம் உங்கள் அண்ணனிடம் போய் சத்யாவை நீங்கள் காதலித்ததை கூறி விடுவேன் என மிரட்டி வந்தாள்.
நீ என்ன சொல்வது நானே சொல்லிவிடுகிறேன் தருண் சவால் விட உடனே ஸ்ருதி தருண் மற்றும் சத்யா இருவரும் இல்லாத நேரத்தில் அழுது கொண்டிருக்கிறார் அதனை பார்த்த வருண் ஏன் இப்படி அழகுறச் என கேட்க எல்லாம் தருண் தான் காரணம் என கூறிவிட்டு தருண் மற்றும் சத்யா இருவரும் முன்பு காதலித்தார்கள் எனவே சத்யா தான் வேண்டுமென்றே தருண்னிடம் என்னிடம் பேசாமல் இருக்கிறார் எனக் கூறுகிறாள்.
அதற்கு வருண் கையில் வைத்திருந்த பையை கீழே போட்டுவிட்டு ரூமிற்கு சென்று அழுது கொண்டிருக்கிறான். அந்த நேரத்தில் பவர் கட்டாக யாரோ இருட்டில் வந்து மெழுகுவத்தி ஏற்றி வைக்கிறார்கள் தீயை பார்த்ததும் வரும் மிகவும் பயந்துபோய் அழைக்கிறான். இதுதான் இன்று ஒளிபரப்பாக உள்ளது.
சந்தோசமா இருந்திட கூடாதே.. உடனே பைய தூக்கிட்டு வந்துற வேண்டியது.. 😠
மௌன ராகம் – திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #MounaRaagam #VijayTelevision pic.twitter.com/iDSu8eU30P
— Vijay Television (@vijaytelevision) April 6, 2022