விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருவதால் தொடர்ந்து 2வது சீசன் 3வது சீசன் என அறிமுகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் முதல் சீசனை விடவும் இரண்டாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் ஒரு சீரியல் தான் மௌன ராகம். இந்த சீரியலின் முதல் பாகத்தில் குழந்தைகளாக இருந்த சக்தி மட்டும் சுருதி இருவரும் வளர்ந்து தற்பொழுது ஒரே வீட்டில் மருமகள்களாக வாழ்ந்து வருகிறார்கள். ஸ்ருதிக்கு சத்யா தான் சக்தி என்பது தெரியாத காரணத்தினால் அதன் தெரிந்து கொள்வதற்காக பல முயற்சிகளை செய்தாள்,அந்த வகையில் சமீபத்தில் சித்யாவின் அம்மா மல்லிகாவை பார்த்து விட்டு சத்யா தான் சக்தி என்பதை உறுதி செய்து கொண்டாள்.
இது ஒரு பக்கம் இருக்க தருண் சந்தியாவை காதலித்து வந்த நிலையில் தனது அம்மாவின் ட்ரீட்மெண்ட் எடுக்க வேண்டும் என்பதற்காக வருணின் அப்பா சொன்னதை கேட்டு வருணை திருமணம் செய்து கொண்டாள். இவ்வாறு சந்தியா திருமணத்திற்குப் பிறகும் தனது அப்பா யார் என்றும் இதுபோல் திருமணத்திற்கு முன்பு தருண் என்னை காதலித்தார் என்றும் வருணனிடம் கூறவில்லை.
எனவே ஸ்ருதி தருணிடம் உங்கள் அண்ணன் கிட்ட போய் நீங்க சந்தியாவை காதலித்ததை சொல்லி விடுவேன் என மிரட்டி கொண்டே இருந்ததால் தருண் நானே சொல்கிறேன் என கூறி வருணனிடம் இதனைப் பற்றிக் கூற வருண் கோபப்பட்டு இதுவரையிலும் நமக்குள் இருந்த உறவு முடிந்து விட்டது என்று கூறினார். இதனை தொடர்ந்து தருணிடம் நான் உனக்கு அண்ணனும் இல்ல தந்தையும் இல்ல என கூறிவிட்டு போகிறார் இதனை பார்த்த ஸ்ருதி மகிழ்ச்சியில் இருந்து வருகிறாள்.