காலில் விழாத குறையாக மல்லிகா, சத்தியாவிடம் கெஞ்சும் ஸ்ருதி.! அவர்கள் பொய் சொல்வார்கள் என கூறும் கார்த்திக் கிருஷ்ணா..

mounaragam-2
mounaragam-2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் மௌன ராகம் 2.தற்பொழுது கார்த்திக் கிருஷ்ணா உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சென்னைக்கு போகாமல் மல்லிகா மற்றும் சத்யா ஆகியோர்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

எப்படியாவது கார்த்திக் கிருஷ்ணாவை சென்னைக்கு அழைத்து சென்று விட வேண்டும் என காதம்பரி பல திட்டங்களை போட்டாலும் கார்த்திக் நான் வர முடியாது என கூறிவிட்டார். சத்தியா, வருண் ஆகியோர்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் காதாபரிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரை சரி செய்ய வேண்டும் என்பதற்காக கார்த்திகை அழைப்பதற்காக ஸ்ருதி மற்றும் தருண் இருவரும் வந்துள்ளார்கள்.

தருண் வருணை பார்த்து காதம்பரி ஆண்டிக்கு மிகவும் உடல்நிலை சரியில்லை அவர் கார்த்திக் அங்கிள்லை பார்த்தால் தான் சரியாவார் என்று கூறியதற்கு வருண் என்னால் எந்த உதவியும் செய்ய முடியாது என கூறி விடுகிறார். பிறகு சுருதி மல்லிகாவை சந்தித்து என்னுடைய அம்மாவிற்கு மிகவும் உடல்நிலை சரியில்லை ஒருமுறை அப்பாவை பார்த்தால் அவர் சரியாகி விடுவார் அவரை எப்படியாவது சென்னைக்கு அனுப்பி வையுங்கள் எனக் கூற மல்லிகாவும் அனுப்பி வைக்கிறேன் என கூறுகிறார்.

இதனை தொடர்ந்து சத்தியாவையும் ஸ்ருதி சந்தித்த நிலையில் நான் சொன்னால் யாரும் நம்ப மாட்டேங்குறாங்க உண்மையிலுமே உடல்நிலை சரியில்லை எனக் கூறி அழுகிறார்.எனவே மல்லிகா மற்றும் சத்தியா இருவரும் இதனைப் பற்றி கார்த்தி கிருஷ்ணாவிடம் பேச கார்த்திக் மற்றும் அவருடைய அம்மா இருவரும் அவர்கள் பொய் சொல்வார்கள்.

சுருதியிடம் என்னென்னலாம் சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்களோ என தெரியவில்லை என கூற மல்லிகா யாருடைய மகிழ்ச்சியும் நாங்கள் கெடுக்க வேண்டும் என நினைக்கவில்லை எனக் கூறுகிறார். இவ்வாறு இன்றைய எபிசோடு இதோடு முடிவடைகிறது கார்த்திக் கிருஷ்ணா சென்னை போவாரா மாட்டாரா என்பதை கேள்விக்குறியாக இருந்து வருகிறது.