தனது அப்பாவை அழைப்பதற்காக மல்லிகாவின் வீட்டிற்கு சென்ற ஸ்ருதி.! வருண் உதவி செய்யாததால் செம கடுப்பில் இருக்கும் தருண்..

mounaragam-2
mounaragam-2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலைகள் சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் மௌன ராகம் 2.இந்த சீரியலில் தற்பொழுது கார்த்திக் கிருஷ்ணா தனது முதல் மனைவி மல்லிகா மற்றும் மகள் சத்யாவுடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் ஒரு பக்கம் காதம்பரி கார்த்திக் கிருஷ்ணா இதற்கு மேல் வரமாட்டார் என்ற எண்ணத்தில் பைத்தியமாக இருந்து வரும் நிலையில் கார்த்தி கிருஷ்ணாவின் கார் வராத பொழுது கார்த்திக் கிருஷ்ணா வந்துவிட்டார் எனக்கூறி அவரை பார்ப்பதற்காக சொல்கிறார். இதனை பார்த்த ஸ்ருதி அம்மா சரியாக வேண்டும் என்றால் அப்பா வந்து தான் ஆக வேண்டும் எனவே எப்படியாவது அப்பாவை சென்னைக்கு அழைத்து வருவேன் என கூறுகிறார்.

தற்பொழுது ஸ்ருதி மற்றும் தருண் இருவரும் மல்லிகாவின் வீட்டிற்கு செல்கிறார்கள். அப்பொழுது மல்லிகா, கார்த்திக் மற்றும் சத்தியா, பழனி ஆகியோர்கள் வெளியில் போய் உள்ள நிலையில் ஸ்ருதி வீட்டிற்குள் வந்து அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பார்த்து கோபப்படுகிறார்.

இதனைப் பார்த்த சத்யாவின் அத்தை ஸ்ருதியை வெறுப்பேற்ற ஸ்ருதி போட்டோவை உடைக்கப் பார்க்கிறார். பிறகு ஸ்ருதியின் பாட்டி வருகிறார்கள் ஸ்ருதி சரியாகிவிடுவார் எனக் கூறுகிறார். தொடர்ந்து ஒரு புறம் தருண் வருணை சந்தித்து கார்த்திக் சாரை சென்னைக்கு அழைத்து செல்வதற்கு உதவி செய் என கேட்கிறார்.

ஆனால் வருண் என்னால் முடியாது இப்பொழுதுதான் கார்த்திக் சார் நிம்மதியாக, மகிழ்ச்சியாக இருந்து வருகிறார் என்னால் அதனை கெடுக்க முடியாது எனக் கூறியதும் தருண் கோபத்துடன் அங்கிருந்து கிளம்புகிறார். பிறகு தருணும் ஸ்ருதியும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஸ்ருதி ஏன் அப்பா இப்படி அப்பா இருக்காரு எனக்கூறி வருத்தப்படுகிறார் அதற்கு தருண் கவலைப்படாத நான் பேசும் வருண் இவன் இல்லை என கூறிக் கொண்டிருக்கிறார் இதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.