அனைவருக்கும் சப்ரைஸ் கொடுத்து குடும்பத்தையே மெய்சிலிர்க்க வைத்த வருண்.! மௌனரகம் 2 சீரியல் இன்றைய எபிசோட்..

Mounaragam 2
Mounaragam 2

தமிழ் சின்னத்திரையில் தொடர்ந்து ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் முக்கியமாக ஒரு சில சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று விட்டால் அதனை இரண்டாவது சீசன் ஒளி பரப்புவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் முதல் சீசன் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது சீசனையும் அறிமுகப்படுத்தி வெற்றிக்கண்டு வரும் சீரியல் தான் மௌனராகம் 2.

இந்த சீரியலில் கார்த்திக் கிருஷ்ணா சென்னைக்கு போகாமல் மல்லிகா மற்றும் சத்யாவுடன் நான் இருந்து வருவேன் என்ற முடிவில் இவர்களுடன் இருந்து வருகிறார். மிகவும் சந்தோஷமாக மல்லிகாவுடன் ரொமான்ஸ் செய்து மகிழ்ச்சியாக இருந்து வரும் கார்த்திக் கிருஷ்ணா தனது ஒவ்வொரு நாளையும் என்ஜாய் செய்து வருகிறார்.

மற்றொரு பக்கம் கார்த்திக் கிருஷ்ணா தனது வீட்டிற்கு வராததால் மேலும் சத்யா மற்றும் மல்லிகாவுடன் அவர் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் காதம்பரி மற்றும் ஸ்ருதி வருத்தத்தில் இருந்து வருகிறார்கள். மேலும் காதம்பரி பைத்தியமாக மாறிவிட்டார் என்று தான் கூற வேண்டும். எனவே காதம்பரியை பார்த்து வருத்தம் படம் ஸ்ருதி எப்படியாவது நான் அப்பாவை சென்னை அழைத்து வந்து விடுவேன் என கூறி வருகிறார்.

இப்படிப்பட்ட நிலைகள் மல்லிகா மற்றும் கார்த்திக் கிருஷ்ணா இருவரும் தனியாக அமர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் அதனை சத்யா பார்த்து மகிழ்ச்சியடைகிறார். பிறகு அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் ஒரு போட்டோ கூட வீட்ல இல்ல என வருணிடம் கூறி வருத்தப்படுகிறார் சத்யா. எனவே வருண் அடுத்த நாளே அனைவருக்கும் சப்ரைஸ் கொடுக்கும் வகையில் போட்டோ பிடிப்பவர்களை  வீட்டிற்கு அழைத்து வந்து குடும்பத்துடன் போட்டோ பிடித்துக் கொள்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் வெளியாகி உள்ள ப்ரோமோவில் போட்டோக்களையும் ஸ்டுடியோவில் இருந்து வருண் வாங்கி வருகிறார். அனைவரையும் சர்ப்ரைஸ் செய்ய வேண்டும் என்பதற்காக ரூமிற்குள் போக வேண்டும் என கூறுகிறார் பிறகு அனைவரும் போய்விடுகிறார்கள்.

உடனே கதவை சாத்திவிட்டு வருண்  அனைத்து போட்டோக்களையும் வீட்டை சுத்தி வைக்கிறார் பிறகு அனைவரும் அதனை பார்த்து மகிழ்ச்சியடைகிறார்கள். இதனை தொடர்ந்து சத்யாவின் பாட்டி உனக்கு எது கேட்டாலும் செய்யும் புருஷன் கிடைத்திருக்கிறான் என கூறுகிறார். பிறகு பழனி நீ சத்யாவை நல்லா பார்த்து பண்ணு எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது என எமோஷனலாக பேசுகிறார். கார்த்திக் கிருஷ்ணா மல்லிகா என அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் இதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது.