விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் சமீப காலங்களாக பல திருப்புங்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் மௌனராகம். இந்த சீரியலில் தற்போது பல வருடங்கள் இருக்கு பிறகு தனது மகள் மற்றும் மனைவியுடன் கார்த்தி கிருஷ்ணா இருந்து வரும் நிலையில் பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்து வருகிறது.
கார்த்திக் கிருஷ்ணா தனக்கு பிடித்தவர்களுடன் இங்கு சந்தோஷமாக இருந்தாலும் காதம்பரி பைத்தியமாக மாறிவுள்ளார். எனவே ஸ்ருதி நான் எப்படியாவது அப்பாவை அழைத்து வந்து விடுவேன் என கூறியுள்ளார். இப்படிப்பட்ட நிலையில் தற்போது கார்த்திக் கிருஷ்ணா மல்லிகாவுடன் நெருக்கமாக இருக்க விரும்புகிறார்.
எனவே கை வலிப்பது போல் நடித்து மல்லிகாவை ஊட்ட வைப்பது வெளியில் நடக்க வேண்டும் என்பதற்காக மல்லிகாவை பிடித்துக் கொண்டு நடப்பது போன்றவற்றை செய்து வருகிறார். இதனால் இவர்கள் மகிழ்ச்சியாக இருந்து வரும் நிலையில் இவர்களை பார்க்கும் சத்யாவும் வருணும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்கள்.
ஒரு பக்கம் சத்தியா மற்றும் வருண் ரொமான்ஸ் செய்ய மற்றொருபுறம் கார்த்திக் கிருஷ்ணா மல்லிகாவை ரசித்து ரொமான்ஸ் செய்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் மல்லிகா மற்றும் தனது அப்பா கார்த்திக் கிருஷ்ணா மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்த சத்தியா அப்பா சென்னைக்கு போய்விடுவார் என வருத்தப்படுகிறார்.
மேலும் அம்மாவும் அப்பாவும் ஒன்றாக இருக்கும் ஒரு புகைப்படம் கூட எங்கள் கிட்ட இல்லை எனக் கூறி சத்யா வருத்தப்படுகிறார் இதனை அறிந்து கொண்ட வருண் அடுத்த நாளே யாருக்கும் தெரியாமல் போட்டோ பிடிப்பவர்களை வீட்டிற்கு வர வைத்து விடுகிறார். எனவே வருண் மற்றும் சத்தியா பொண்ணு மாப்பிள்ளை போல் கிளம்பி வருகிறார்கள்.
இவர்கள் இருவரும் இணைந்து கார்த்திக் மற்றும் மல்லிகாவை புது பொண்ணு மாப்பிள்ளை போல் அலங்கரித்து போட்டோ சூட் நடத்துகிறார்கள். மேலும் குடும்பமாக அனைவரும் ஒன்று சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிலையில் இதோடு இந்த எபிசோடு முடிவடைகிறது.
இப்படி போய்க்கொண்டிருக்கும் நிலையில் ஸ்ருதி எப்படியாவது கார்த்தி கிருஷ்ணாவை சென்னைக்கு அழைத்து சென்றுவிட வேண்டும் என்ற முடிவில் வந்து கொண்டிருக்கிறார் எனவே கார்த்திக் கிருஷ்ணா இதற்கு மேல் சென்னைக்கு போவாரா இல்லை மல்லிகா மற்றும் சத்யாவுடன் வாழ்ந்து வருவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருந்து வருகிறது.