விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் மௌன ராகம் 2.இந்த சீரியலில் கார்த்திக் கிருஷ்ணாவை ரவுடி கத்தியால் குத்திய நிலையில் அவர் மல்லிகா மற்றும் சத்தியா ஆகியர்களுடன் வாழ்ந்து வந்தார்.
பிறகு காதம்பரிக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தினால் சுருதி அனைவர் மனதையும் மாற்றி எப்படியோ சென்னைக்கு கார்த்திகை அழைத்து வந்து விடுகிறார். மேலும் அவர்களுடன் சத்யாவின் அத்தை சொர்ணமும் வருகிறார் மேலும் சொரணத்திற்கு அப்பொழுது காதம்பரி மற்றும் அவரின் அம்மா மீது சந்தேகம் ஏற்படுகிறது.
மேலும் வீட்டிற்கு போய் கொண்டு இருக்கும் பொழுது சத்தியா அந்த ரவுடிகளை பார்க்கிறார் மேலும் அந்த ரவுடிகளின் வண்டி நம்பரை குறித்து வைத்துக் கொண்டு பிறகு தனது மாமனார் மனோகரிடம் இதனைப் பற்றி கூறுகிறார். அவரும் போலீசாரிடம் இதனைப் பற்றி கூற எப்படியோ ரவுடிகளை தேடி கண்டுபிடித்து விடுகிறார்கள். பிறகு வருண் அந்த ரவுடியை அடித்து உண்மையை கேட்கும் பொழுது தான் தெரிகிறது அவர்கள் சத்யாவை தான் கொள்வதற்காக வந்தார்கள் என.
மேலும் சத்யாவை கொள்ள காதாமாரி மற்றும் அவருடைய அம்மா தான் தங்களை அனுப்பி வைத்ததாக கூறுகிறார்கள்.மேலும் அதிர்ச்சி அடைந்த அனைவரும் காதம்பரி மற்றும் அவருடைய அம்மாவை போலீசாரிடம் ஒப்படைகிறார்கள் தற்பொழுது இவர்கள் ஜெயிலில் இருந்து வரும் நிலையில் மல்லிகாவும் சென்னைக்கு வந்துள்ளார்.
உடனே மல்லிகா இதற்கு மேல் நான் ஊருக்கு போகிறேன் என கூற அனைவரும் இதுதான் உங்கள் வீடு நீங்கள் தான் வாழனும் என கூறினாலும் அவர் மறுத்து வருகிறார் பிறகு சத்தியா நாம் கஷ்டப்பட்டதெல்லாம் போதும் இதுதான் நம்முடைய வீடு நீ இங்கதான் இருக்கணும் எனக் கூறுகிறார்.மேலும் அனைவரும் கார்த்திக் கிருஷ்ணா உடன் சேர்ந்து வாழ வேண்டும் எனக் கூறி வருகிறார்கள். அடுத்ததாக மல்லிகா என்ன முடிவெடுப்பார் என்ற எபிசோடு இதற்கு மேல் ஒளிபரப்பாக இருக்கிறது.