கார்த்திக் கிருஷ்ணாவை குத்திய ரவுடிகளை கையும் களவுமாக பிடித்த போலீசார்.! அதிர்ச்சியில் ஸ்ருதி..

mouna ragam
mouna ragam

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் மௌன ராகம் 2. எந்த ஒரு பிரச்சனைக்கும் பஞ்சமில்லாமல் வாரம் தோறும் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது இந்நிலையில் தற்பொழுது காதம்பரிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கார்த்திக் கிருஷ்ணாவை சத்தியா காதம்பரி வீட்டிற்கு அழைத்து வந்து இருக்கிறார்.

மேலும் இவர்களுடன் சந்தியாவின் அத்தை சொர்ணமும் வந்திருக்கிறார் முதல் நாளே ருக்குமணி மீது சொர்ணமுக்கு சந்தேகம் வந்துவிடுகிறது மேலும் சத்தியா கண்ணில் கார்த்திக் கிருஷ்ணா குத்திய ரவுடியும் மாட்டிக் கொள்கிறார் மேலும் இதனை பற்றி விசாரிக்க ஆரம்பித்துள்ளார் அந்த வகையில் மனோகரிடம் விசாரிக்குமாறு சத்யா கூறியுள்ளார் மனோகரம் உடனே போலீசுக்கு போன் செய்து இதனைப் பற்றி கூறுகிறார்.

சத்யா சொன்ன வண்டி நம்பரை வைத்து போலீசும் ரவுடிகளை வலை வீசி தேடி வருகிறார்கள் கடைசியில் ரவுடிகள் போலீசிடம் மாட்டிக் கொள்ளும் நிலையில் இந்த தகவலை போலீசார் மனோகருக்கு போன் செய்து சொல்கிறார்கள் மனோகரம் வீட்டில் இருக்கும் அனைவரிடமும் சொல்கிறார். பிறகு அப்பொழுது ஸ்ருதி இவ்வளவு விஷயம் நடந்தது என்பதே தெரியாமல் இருந்துள்ளார்.

உடனே அவருக்கு பதற்றத்தில் ருக்மணிக்கு போன் செய்து அனைத்தையும் கூறுகிறார் அப்பொழுது ருக்குமணி காதம்பரி வீட்டுக்கு ரவுடி வந்தது பணம் கேட்டு மிரட்டியது என எல்லா கதையையும் சொல்கிறார் சுருதி மிகவும் அதிர்ச்சி அடைகிறார் இந்த நேரம் தருணம் ரூமுக்கு வந்து விடுகிறார் வீட்டில் இருக்கும் எல்லோரும் போலீஸ் ஸ்டேஷன் கிளம்புகின்றனர்.

இதோடு இன்றைய எபிசோட் முடிவடைகிறது இதனை தெரிந்து கொண்டவுடன் சமீப காலங்களாக சுருதிக்கு தருண் சப்போர்ட்டாக இருந்து வரும் நிலையில் மேலும்  தருண் ஸ்ருதியை வெருக்க தொடங்கி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது இதனைத் தொடர்ந்து கார்த்திக் கிருஷ்ணா மொத்தமாக மல்லிகாவுடன் வாழ தொடங்கி விடுவார் என இவை நடக்க வாய்ப்பு இருக்கிறது.