தமிழ் சின்னத்திரையில் முக்கியமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் டிவி தொடர்ந்து ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது அந்த வகையில் முக்கியமான சில சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்கினை பெறுவதால் அதனை இரண்டாவது பாகம் ஒளிபரப்புவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் முதல் சீசன் முடிந்த நிலையில் இரண்டாவது சீசனையும் அறிமுகப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் சீரியல்தான் மௌன ராகம் 2. கார்த்திக் கிருஷ்ணாவிற்கு கத்திக்குத்து ஏற்பட்டதால் அவர் உடல்நிலை சரியாகும் வரை மல்லிகா,சத்யாவுடன் வாழ வேண்டும் என நினைத்து வந்தார்.
மேலும் அவருக்கு சென்னை வர விருப்பம் இல்லாததால் மல்லிகாவுடன் இருந்து வந்தார் இந்த நேரத்தில் ஸ்ருதி தனது அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி கார்த்திக் கிருஷ்ணாவை சென்னைக்கு வருமாறு அழைத்திருந்தார் காதம்பரி கார்த்திக் கிருஷ்ணா மல்லிகாவுடன் இருப்பதால் தவறாக பல எண்ணங்கள் தோற்ற அவர் பைத்தியம் போல் நடந்து கொள்கிறார்.
இதன் காரணமாக சுருதி கார்த்திக் கிருஷ்ணாவிடம் இதனைப் பற்றி கூற அவர்கள் பொய் சொல்கிறார்கள் என நினைத்து வந்தார். மேலும் சுருதி சத்தியா,மல்லிகா அவர்களை சந்தித்து இவ்வாறு கூறிய பிறகு அவர்கள் சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள் மேலும் சத்தியா கார்த்திக் கிருஷ்ணாவை அழைத்து வந்து காதம்பரியிடம் விட நீங்கள் எங்கும் போகாதீங்க இன்னும் இரண்டு நாளில் மீண்டும் போய் விடுவிங்கன்னு எல்லோரும் சொல்றாங்க நான் உங்களை விட மாட்டேன் எனக் கூறுகிறார்.
இந்த நேரத்தில் சத்தியா தனது வீட்டிற்கு செல்ல அங்கு காதம்பரியின் அம்மா ஒரு ரவுடிக்கு பணம் தந்து கொண்டிருக்கிறார் அந்த ரவுடியை சந்தேகத்துடன் இறங்கி பார்க்க சந்தியாவின் அத்தை வருமாறு கூறியதால் அவர் அப்படியே யோசித்துக் கொண்டே காரில் சென்று விடுகிறார். அங்கு போனவுடன் வருண் சத்யா இருவரும் ரொமான்ஸ் செய்து கொண்டு வலது காலை எடுத்து வைத்து தங்களது வீட்டிற்குள் போகிறார்கள் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.