விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்பொழுது பல பிரச்சினைகளுக்கு பிறகு மிகவும் மகிழ்ச்சியாக ஒரே வீட்டில் தனது மகள் மற்றும் மனைவியுடன் சந்தோஷமாக கார்த்தி கிருஷ்ணா வாழ்ந்து வருகிறார்.
மௌன ராகம் 2 சீரியலில் ஒரே வீட்டில் தற்பொழுது தனது குடும்பத்துடன் கார்த்திக் கிருஷ்ணா இருந்து வரும் நிலையில் ரசிகர்கள் விரும்பும் வகையில் பல எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதோட மட்டுமல்லாமல் பல பிரச்சினைகளுக்கு பிறகு தற்போது தான் சத்தியா மற்றும் வருண் இருவரும் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் இன்றைய எபிசோடில் பழனி அனைவருக்கும் தன் கையால் அசைவ சாப்பாடை சமைத்துள்ளார் அனைவரும் உட்கார்ந்த சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் சாப்பாடு எப்படி இருக்கு என கேட்க அனைவரும் நல்லா இருக்கு என கூறுகிறார்கள். பிறகு வருண் நீங்க ரொம்ப மோசம் எனக் கூறுகிறார் ஏன் என்று கேட்டதற்கு உங்க மாப்பிள்ளைக்கு மட்டும் அசைவ சாப்பாடு எனக்கு மட்டும் கப்புல சாப்பாடு என கூறி கிண்டல் செய்கிறார்.
பிறகு கார்த்திக் கிருஷ்ணா இந்த கையால் சாப்பிட கஷ்டமா இருக்கு எனக் கூற எப்படியாவது மல்லிகாவை அவருக்கு ஊட்டி வைக்க வேண்டும் என அனைவரும் திட்டம் போடுகிறார்கள் எனவே கார்த்திக் கிருஷ்ணாவின் அம்மா நான் இவ்வளவு தூரம் இருக்கேனே என்னால எப்படி ஊட்டி விட முடியும் என கூறுகிறார் பிறகு பழனி அதுக்கு என்ன மல்லிகா ஊட்டி விடுவாள் என கூறுகிறான்.
பிறகு கூச்சப்படாத உன்னோட புருஷன் தானே என கூறிய பிறகு கார்த்திக் கிருஷ்ணாவிற்கு மல்லிகா ஊட்டி விடுகிறார். இந்த நேரத்தில் வருனும் சத்யாவிற்கு சாப்பாடு ஊட்டி விடுகிறார் இதனை பார்த்த கார்த்திக் கிருஷ்ணாவின் அம்மா இந்த நேரத்துல என் பேத்திக்கு நீயும் ஊட்டி விடுறியா என கூற அனைவரும் சிரிக்கிறார்கள்.
பிறகு கார்த்திக் கிருஷ்ணா வெளியில் கொஞ்சம் நடந்து சென்றால் நல்லா இருக்கும் என கூற மல்லிகா அவரை அழைத்துக் கொண்டு செல்கிறார். அதனைப் பார்த்ததும் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள் ஆனால் சத்தியா எப்படி இருந்தாலும் அப்பா சென்னைக்கு போய் தான் ஆக வேண்டும் எனக் கூற கார்த்தி கிருஷ்ணாவின் அம்மா அவன் ஏன் அங்கு போக வேண்டும் என கூறுகிறார்.
இதனைத் தொடர்ந்து காதம்பரி கார்த்திக் கிருஷ்ணா இல்லாததால் பைத்தியமாக நடந்து கொள்ளும் நேரத்தில் ரூமில் இருந்து வெளியில் வருகிறார். ஸ்ருதி எங்க போறீங்க என்று கேட்டதற்கு கார்த்திக் வர கார் சத்தம் கேட்டது என கூறுகிறார் பிறகு ஸ்ருதி அழுது கொண்டே எப்படியாவது நான் அப்பாவை அழைத்து வருகிறேன் என கூறிவிட்டு தருணிடம் இந்த உண்மையான அன்பு அப்பாவிற்கு புரியவில்லை எனக் கூறி வருத்தப்படுகிறார்.