விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் மௌனராகம் 2. இந்த சீரியல் மிகவும் விறுவிறுப்பாக எதிர்பாராத பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது தற்போது கார்த்திக் கிருஷ்ணா கத்தி குத்து வாங்கி ஓரளவிற்கு உடல்நிலை சரியான காரணத்தினால் மல்லிகாவின் வீட்டில் தனது மகள், மனைவி ஆகியோர்களுடன் வாழ்ந்து வருகிறார்.
இவ்வாறு கார்த்திக் கிருஷ்ணா மல்லிகா சத்யாவுடன் இருப்பது காதம்பரி மற்றும் ஸ்ருதிக்கு மிகப்பெரிய வெறுப்பை தருகிறது. இதன் காரணமாக காதம்பரி சாப்பிடாமல் இரவு முழுவதும் தூங்காமலும் நான் மல்லிகாவை கொன்றே ஆவேன் என கூறி வருகிறார். மேலும் சுருதி இதற்கு மேல் அப்பா இங்கு வர மாட்டாரு என கூறிவிட்டு காதம்பரியை சாப்பிட சொல்கிறார்.
ஒரு பக்கம் சத்தியா மற்றும் வருண் மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்கள். இவர்கள் தற்பொழுது ரொமான்ஸ் செய்வோம் ஆரம்பித்துள்ளார்கள். இவர்கள் ஊர் சுற்றி வருவதால் கார்த்திக் கிருஷ்ணாவை பார்த்துக் கொள்வதற்கு ஆள் இல்லாத நிலையில் மல்லிகாவை கார்த்திக் கிருஷ்ணா கூப்பிட்டு உட்காருவதற்கு உதவி செய்ய கூறுகிறார்.
கார்த்திக் கிருஷ்ணாவை உட்கார வைத்துவிட்டு மல்லிகா கிளம்ப போகாத எனக் கூற பிறகு கார்த்திக் பக்கத்தில் மல்லிகா உட்காருகிறார். மல்லிகாவிடம் நான் இங்கு இருப்பது உனக்கு பிடிக்கவில்லை என தெரியும் என கூறி கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார் இந்த நேரத்தில் மல்லிகா சமைக்கிற வேலை இருக்கு என கூறிவிட்டு செல்கிறார்.
மல்லிகாவின் அண்ணன் நான் சமைக்கிற வேலையை பார்த்துக் கொள்கிறேன் நீ கார்த்திக்யிடம் பேசு என கூறிவிட்டு சமைக்ற வேலையை செய்கிறார். பிறகு மனதை மாற்றும் படி கார்த்தி கிருஷ்ணா தொடர்ந்து பேசி வருகிறார் ஆனால் மல்லிகா பெரிதாக எதுவும் கூறாமல் அப்படியே இருக்கிறார். இதனைத்தொடர்ந்து வருண் மற்றும் சத்யா வெளியில் சென்று கொண்டிருக்கும் பொழுது வேலையாட்களுக்கு இன்னைக்கு என்னுடைய ட்ரீட் யாரும் டீக்கு பணம் தர வேண்டாம் என கூறி விடுகிறார் வருண் எனவே அங்கு இருப்பவர்கள் சத்யாவிடம் கணவன் கிடைத்திருப்பதற்கு நீ கொடுத்து வைத்திருக்க வேண்டும் என கூறுகிறார்கள்.