சத்யா அப்பா எனக் கூப்பிட மறுபடியும் அப்பா என கூப்பிடுமாறு கூறும் கார்த்திக் கிருஷ்ணா.! கோபத்தில் வெளியே சென்ற ஸ்ருதி..

mounaragam-serial-2-18
mounaragam-serial-2-18

முதல் சீசன் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது சீசனை சமீபத்தில் அறிமுகப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் சீரியல்தான் விஜய் டிவி மௌனராகம் 2. இந்த சீரியல் தொடர்ந்து மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நிலைகள் தற்பொழுது சத்யாவை கொலை செய்வதற்காக காதம்பரி மற்றும் அவருடைய அம்மா இருவரும் ரவுடிகளை ரெடி செய்து வைத்திருந்த நிலையில் அவர்கள் சத்யாவை கத்தியால் குத்த போகும் நேரத்தில் கார்த்திக் கிருஷ்ணா சத்யாவை காப்பாத்தி விட்டு அந்த கத்தி குத்தை தான் வாங்கிக்கொள்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில் கார்த்திக் கிருஷ்ணாவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வைத்திருந்த நிலையில் மருத்துவர்கள் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை உயிர் பிழைத்து விடுவார் என்று கூறியது அனைவரும் மகிழ்ச்சியடைகிறார்கள்.

பிறகு ஸ்ருதி சத்யாவை மருத்துவரையும் கார்த்திக் கிருஷ்ணாவையும் பார்க்க விடாமல் தடுக்கிறார்.  ஆனால் வருண் மற்றும் சத்யாவின் அத்தை இருவரும் ஸ்ருதியை மிரட்டி அனுப்பி வைக்கிறார்கள். அதன் பிறகு அடுத்த நாள் சுருதி தனது அப்பாவை சென்னைக்கு அழைத்து போவதாக கூறுகிறார்.

ஆனால் அதற்கு சத்யா அப்பா இங்க தான் இருப்பார் எங்கேயும் அழைச்சிட்டு போக முடியாது எனக் கூறி சுருதியை மிரட்ட பிறகு அமைதியாக போய் விடுகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்போது கார்த்திக் கிருஷ்ணா கண்ணை திறக்க உடனே சத்யா போய் அப்பா என்ன கூப்பிடுகிறார்.

அப்பா இப்ப எப்படி இருக்கீங்க என கேட்க கார்த்திக் கிருஷ்ணா சிரிக்கிறார் பிறகு மறுபடியும் அப்பா என கூப்பிடுமாறு கூற நான் கடைசியாக கேட்ட குரலும் நீதான் இப்ப கண் விழித்த உடன் அப்பா என கூப்பிட எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது எனக்கு கூறுகிறார்.

இதனைக் கேட்ட வருண் மகிழ்ச்சியடைய பக்கத்தில் இருந்த ஸ்ருதி தன்னை கண்டு கொள்ளாமல் சத்யாவை மட்டும் கண்டு கொள்கிறார் என கோபத்தில் அந்த ரூமை விட்டு வெளியில் சென்று விடுகிறார். இதுதான் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாக இருக்கிறது.