தனது அப்பா கார்த்திக்தான் என்ற உண்மையை வருணிடம் சொன்ன சக்தி.! கதிகலங்கி நிற்கும் காதாம்பரி மற்றும் ஸ்ருதி..

mouna ragam 1
mouna ragam 1

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாகவே ஒளிபரப்பப்பட்டு வரும் நாடகம்தான் மௌனராகம் இந்த நாடகத்தின் முதல் பாகம் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாம் பாகமும் வெற்றிகரமாக ஒளிபரப்பப்படுகிறது.

இந்த நாடகத்தில் கார்த்தி கிருஷ்ணாவிற்கு இரு மனைவிகள் இருப்பார்கள் அதில் ஒரு மனைவி அனைவரும் அறிந்த காதம்பரி,ஆனால் இன்னொரு மனைவி எவரும் அறிந்திராத ஒருவர் அவர் பெயர் மல்லிகா இவர்கள் இருவருக்கும் பெண் குழந்தைகள் உள்ளனர், ஆரம்பத்தில் முதல் பாகத்தில் கார்த்திக் கிருஷ்ணாவிற்கும் காதம்பரிக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகளின் காரணமாக பல பிரச்சினையுடன் நாடகம் சென்று கொண்டிருந்தது.

அதன்பிறகு மல்லிகா நடுவில் உயிரோடு இருக்கிறார் என்று அறிந்த கார்த்திக் கிருஷ்ணா அவரை தேடி எங்கெங்கோ அலைந்து சென்றார், இது ஒரு பக்கம் நாடகத்தை மிகவும் விறுவிறுப்பாக கூட்டிச் சென்றது.

இந்த நிலையில்தான் காலம் கடந்து செல்ல நாடகத்தின் இரண்டாம் பாகத்தில் இரு மகள்களும் பெரிய ஆளாகி வளர்ந்து வந்தனர்.காதம்பரி மகள் ஸ்ருதியும், மல்லிகாவின் மகள் சக்தியும் ஒரே வீட்டில் உள்ள அண்ணன் தம்பியை திருமணம் செய்து கொண்டனர். மல்லிகாவின் மகள் சக்திதான் என்று சுருதி மட்டும் அறிந்திருந்த நிலையில் எப்படியாவது சக்தியை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று எண்ணினார் அதை செய்தும் முடித்தார்.

தற்பொழுது வெளியான இந்த நாடகத்தின் புரோமோவில் சக்தியை சென்று அழைத்து வர சென்ற அவரது கணவர் சக்தியை வீட்டிற்கு வா என்று கையை பிடித்து இழுக்கிறார் ஆனால் அதற்கு சக்தி “உங்கள் அனைவருக்கும் தெரியாத உண்மையை நான் கூறுகிறேன்” என்று கூறுகிறார் அது என்னவென்றால் “நான் கார்த்தி கிருஷ்ணாவின் மகள் அதாவது கார்த்தி கிருஷ்ணாவுக்கும் மல்லிகாவுக்கும் பிறந்த மகள்!!” என்று சத்தமாக கத்தி கூறுகிறார் சக்தி.