விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது.மேலும் இதனை தொடர்ந்து விஜய் டிவி ரசிகர்கள் விரும்பும் வகையில் பல சுவாரசியமான நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து ஐந்தாண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் இந்நிகழ்ச்சியின் மூலம் சினிமாவில் பிரபலமடைய முடியாமல் தவித்து வரும் பலருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக இருந்து வருகிறது.
மேலும் ரசிகர்களின் கோரிக்கையின் படி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் வகையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் ஒளிபரப்பானது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ஆறாவது சீசன் ஒளிபரப்பு அதற்கான வேலைகளை விஜய் டிவி தொடங்கியுள்ளது. அந்த வகையில் முதற்கட்ட பணியாக தொடர்ந்து பல மாதங்களாக விஜய் டிவி பிக்பாஸ் போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது.
மேலும் தொடர்ந்து பல போட்டியாளர்களின் பெயரும் வெளியாகி வந்த நிலையில் அது எந்த அளவிற்கு உண்மையில் என்பது தெரியாமல் இருந்து வந்தது. அதோடு மட்டுமல்லாமல் இரண்டு முக்கிய கவர்ச்சி நடிகைகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் மேலும் தொடர்ந்து சர்ச்சைக்கு பிரபலமாக இருந்து வரும் பிரபலங்களை தான் பிக் பாஸ் சீசன் ஆறில் அறிமுகப்படுத்த இருக்கிறார்கள் எனவும் கிசுகிசுக்கப்பட்டு வந்தது.
இதனைத் தொடர்ந்து பிரபலங்கள் மட்டுமல்லாமல் சாதாரணமானவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவர்கள் விஜய்டிவிக்கு விண்ணப்பம் செய்யலாம் என்றும் தகுதி வாய்ந்தவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது இந்நிகழ்ச்சியின் வீடியோவை பிக்பாஸ் சீசன் ஐந்தின் டைட்டில் வின்னர் ராஜு நடித்துள்ளார் அதனை எடுத்து ஏராளமானவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விண்ணப்பித்து வருவதாகவும் கூறப்படுகிறது இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை விஜய் டிவி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் முறையாக மக்களாகிய நீங்கள் பங்கேற்க ஒரு அறிய வாய்ப்பு! 😎
உடனே https://t.co/EebJTRrsGG Login செய்து #BIGGBOSS-இல் கலந்து கொள்வதற்கான காரணத்தை வீடியோவாக பதிவு செய்து Upload செய்யுங்கள்.. 😊 #BiggBossTamil #BBTamilSeason6 #BiggBossTamil6 #பிக்பாஸ் pic.twitter.com/63qFGQqMAq— Vijay Television (@vijaytelevision) August 25, 2022