பொதுவாக சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து தங்களுக்கென ஒரு மவுசு உருவாக்கிவிட்டால் சீரியலின் நடிப்பதை பாதியிலேயே நிறுத்திவிட்டு ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் திரைப்படங்களில் நடிப்பதற்கான பணியில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் ரியாலிட்டி ஷோவில் வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் நடிப்பதை நிறுத்திய நடிகைதான் ரோஷினி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். இந்த சீரியல் இவருக்கு சினிமா வாழ்வில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
இவரின் எதார்த்த நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பையும் பெற்றார். இவ்வாறு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெற்றிகரமாக இரண்டு சீசன்களில் முடிந்த நிலையில் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
கோமாளிகள் மற்றும் குக்குகள், நடுவர்கள் என அனைவரும் சேர்ந்து செய்யும் அட்டகாசம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் சமீப காலங்களாக மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இதில் ரோஷ்னியும் பங்கு பெற்று வருகிறார். தற்பொழுது இந்த வாரத்தில் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் நான்காவது எலிமினேஷனில் யார் வெளியேறுவார் என்று இருந்த நிலையில் இறுதியில் சந்தோஷம் மற்றும் ரேஷ்னி இருவரில் யார் என்பதை அறிந்து கொள்ளும் தருணம் வந்தது.
ஆரம்ப காலகட்டத்திலேயே சந்தோஷம் மற்றும் ரோஷனி இருவருக்கும் அழகான நட்பு இருந்து வந்த நிலையில் அந்த தருணத்தின் போது சந்தோஷ் ஒருவேளை ரோஷினி வெளியேறினால் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது எனக் கூறி கண்கலங்கினார்.
இவரை தொடர்ந்து கோமாளி பரத் மற்றும் மணிமேகலை அவர்களுடன் நடுவரான வெங்கடேஷ் பட் ஆகியோரும் கண் கலங்கினார்கள்.பிறகு அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் வகையில் தாமு இந்த வாரம் நோ எழிமினேஷன் என கூற அனைவரும் சந்தோஷத்துடன் துள்ளிக் குதித்தார்கள்.