Vijay tv KPY bala : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் பாலா தன்னுடைய ரைமிங் காமெடியால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர். இவர் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியிளும் தொகுப்பாளராக பங்கேற்றார்.
இப்படி டிவி நிகழ்ச்சியில் சம்பாதித்து வரும் பாலா படங்களிலும் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். தான் சம்பாதிக்கும் பணத்தை தனக்கு மட்டுமே செலவு பண்ணிக்காமல் தன்னால் முடிந்த அளவு ஆதரவற்றவர்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு KPY பாலா மருத்துவமனையில் சிகிச்சைக்காக போராடிக் கொண்டிருந்த பாவா லட்சுமணனை நேரில் சந்தித்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து உதவினார். அது மட்டும் இல்லாமல் முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்து உதவி கரம் நீட்டியவர், அது மட்டும் இல்லாமல் மலைவாழ் கிராம மக்களுக்கு ஒரு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்தார் இப்படி தேடித்தேடி உதவி செய்து வருகிறார் பாலா.
அந்த லிஸ்டில் தற்பொழுது தன்னுடைய செல்போனுக்கு அதிரடியாக ஒரு கால் வந்துள்ளது அதில் ஒரு அம்மா தன்னுடைய மகளுக்கு உடல் நிலை சரியில்லை எண்ணவும் அவரைப்பற்றி உங்களுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிடுங்கள் எனக்கு மருத்துவ உதவி கிடைக்கும் என கூறி இருந்தார் அது மட்டும் இல்லாமல் அந்த தாய் சில வீடியோவையும் அனுப்பி வைத்திருந்தார்.
உடனே பாலா அந்த வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் பகிர மனசு வராததால் அவர் வீட்டிற்கு சென்று தன்னால் முடிந்த ஒரு லட்சம் தொகையை அவர்கள் கைகளில் கொடுத்துள்ளார் அதுமட்டுமில்லாமல் அந்த பெண்ணிற்கு பிசியோதெரபி சிகிச்சைக்கு ஆகும் மொத்த செலவையும் தானே ஏற்றுக் கொண்டு இருப்பதாக வாக்கு கொடுத்துள்ளார், உடேன அந்த பெண் கண் கலங்கியுள்ளார், இதனை வீடியோவாக பாலா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.